'ஓசியில் சரக்கு கொடு'.. டாஸ்மாக் கடையில் 'குடிமகன்'கள் அலப்பறை.. விற்பனையாளருக்கு கத்திக்குத்து!
காஞ்சிபுரம்: மதுபானத்துக்கு பணம் தர முடியாது என்று தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியதால் குத்தினார்கள். காஞ்சிபுரம் அடுத்த கூரம் கேட் அருகே ஈஞ்சம்பாக்கம் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் டாஸ்மாக் விற்பனையாளர்களாக திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த கோபி(47) , ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இருவரும் வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதை உச்சத்தில் இருந்த 2 பேர் கடைக்கு வந்துள்ளனர்.

'ஓசியில் சரக்கு கொடு'
அவர்கள் இரண்டு குவாட்டர் மதுபானங்களை வாங்கியுள்ளனர். கடை விற்பனையாளர் கோபி மதுபானத்திற்குரிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் ஓசியில் சரக்கு கொடு. பணம் தர முடியாது'' என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்தால்தான் மதுபானம் கொடுக்க முடியும் என்று விற்பனையாளர்கள் கூறினர். ஆனால் மறுபடியும் அந்த நபர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

சரமாரியாக வெட்டினார்
இதனால் விற்பனையாளர்களுக்கும், மதுபோதையில் இருந்த நபர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மர்ம நபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை வைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபியின் முகத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த நபர்கள் இருவரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை
பின்னர் படுகாயமடைந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் கோபி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

டாஸ்மாக் கடைகள் மூடல்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் கடை விற்பனையாளரை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளையும் டாஸ்மாக் பணியாளர்கள் மூடினார்கள். இதனால் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications