அம்பேத்கர் சிலைக்கு ‘காவி' துண்டு! சர்ச்சையை தூண்டி விட்ட சமூக விரோதிகள்! வீறு கொண்டெழுந்த விசிக!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தின் வாயில் முன்பு உள்ள இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளித்த அண்ணன் அம்பேத்கர் சிலை உள்ளது.

அம்பேத்கர் சிலை
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.

காவித் துண்டு
இந்த தகவலை அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விசிக போராட்டம்
காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் பரபரப்பு
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.. இதனால் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவித்துண்டு அணிவித்தவர்கள் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications