இரண்டாவது முறையாக எம்பியான வழக்கறிஞர்! காஞ்சிபுரத்தின் "செல்வம்"! யார் இவர்?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வென்ற ஜி. செல்வம் யார் என தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்து நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்தான் வென்றனர். புதுவையில் உள்ள ஒரு சீட்டையும் அவர்கள் பெற்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் சிட்டிங் எம்பியான ஜி.செல்வம் திமுக சார்பில் போட்டியிட்டார். ராஜசேகர் (அஇஅதிமுக), வி. ஜோதி (பாமக), வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,86,044 ஆகும். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 2,21,473 வாக்குகள் ஆகும். பாமக வேட்பாளர் ஜோதி 1,64,931வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
இரண்டாவது முறையாக எம்பியாகியுள்ள ஜி.செல்வம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இவர் விவசாயி, வழக்கறிஞர், அரசியல்வாதி. பச்சையப்பா கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படித்தார். பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்துள்ளார். இவருடைய மனைவி பெயர் ஷகிலா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
திமுக சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கு.செல்வம் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட அவர் 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 3ஆவது முறையாக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியின் ஆதரவுடன் களம் இறங்கியுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்பட்ட நிலையிலும் இவர் வென்றுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications