டைட் ஜீன்ஸ்..ப்யூட்டி பார்லர்! ராத்திரி வீடியோ சாட்டால் சிதைந்த குடும்பம்! காதல் மனைவியை கொன்ற எபி!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் கணவனே மனைவியை மிகக் கொடூரமாக வெட்டி ஆற்றங்கரையோரம் போட்டுச் சென்ற சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மனைவியை கொலை செய்ததற்கான காரணத்தை 11 பக்க கடிதத்தில் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மிகவும் பரபரப்பான கன்னியாகுமரி மூலச்சல் ஆற்றின் கரையோரத்தில் கடந்த வியாழக்கிழமை டி -ஷர்ட் அணிந்த இளம் பெண் ஒருவரின் உடல் ரத்த சகதியில் கிடப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு நள்ளிரவில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதறிபோய் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடற்கூறு ஆய்வுக்காக அந்த உடலை அனுப்பி வைத்தனர்.

பெண் கொலை

பெண் கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெப பிரின்ஸா என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்திருக்கிறார். கன்னியாகுமரி அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான எபினேசர் என்பவருக்கும் ஜெபபிரின்ஸாவுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. தம்பதியினருக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து இருக்கிறார் ஜெப பிரின்ஸா.

கணவன் வெறிச்செயல்

கணவன் வெறிச்செயல்

தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பியூட்டி பார்லர் ஒன்றில் பார்ட் டைம் ஆக வேலை செய்து வருவதோடு அது தொடர்பான படிப்புக்கு தாய் வீட்டில் தங்கியிருந்தபடியே சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் வியாழனன்று இரவு மனைவியுடன் சமாதானம் பேச வேண்டும் என அழைத்துச் சென்ற எபினேசர் மனைவி என்றும் பாராமல் கொடூரமாக தலையிலேயே வெட்டிக் கொலை செய்துவிட்டு உடலை ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

ஜீன்ஸ் டி-ஷர்ட்

ஜீன்ஸ் டி-ஷர்ட்

ஜெயபிரின்சாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த எபனேசரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட ஜெப பிரின்சா ஜீன்ஸ் டி-ஷர்ட் என மாடர்ன் உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் இது தேவையா என கேட்ட எபினேசருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பியூட்டிசியன் ஆக வேண்டும் என பியூட்டி பார்லருக்கு சென்று வந்ததால் தகராறு மேலும் அதிகரித்து இருக்கிறது.

ஆண் நண்பர்கள்

ஆண் நண்பர்கள்

மேலும் பல ஆண் நண்பர்களுடன் அவருக்கு முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தினமும் முகம் சுளிக்கத்தக்க வகையில் உடைகளை அணிந்து கொண்டு ஆண் நண்பர்களோடு டேட்டிங் செல்கிறேன் எனச் சொல்லி நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கிறார் ஜெப பிரின்ஸா. வீட்டிற்கு வந்தாலும் தனி அறையில் முடங்கி கிடக்கும் அவர் இரவு நேரங்களில் வீடியோ கால் எப்போதும் சாட்டிங் என எல்லை மீறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த எபினேசர் அவரது செல்போனை பார்த்த போது பல ஆண்களுடன் எல்லை மீறி பழகிய புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியில் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.

11 பக்க கடிதம்

11 பக்க கடிதம்

இதை அடுத்து மனைவியை தனியாக அழைத்து இனி இதுபோன்று செய்யாதே எனக் கூறியும் அவர் கேட்காமல் தாய் வீட்டுக்கு கோபித்து சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் இருந்த எபினேசர் சமாதானம் பேசுவதாக அழைத்து வந்து மனைவியை வெட்டி கொலை செய்ததோடு போலீசார் பிடிக்க வந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதை அடுத்து சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எபினேசர் தனது மனைவியை இதற்காகத்தான் கொலை செய்கிறேன் என 11 பக்க கடிதம் எழுதி வெளியிட்டதோடு தனது மனைவி பல ஆண்களுடன் பேசிய வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+