ஒரே நாளில் 62 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. நடுத்தெருவுக்கு வந்த தம்பதி.. கன்னியாகுமரியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் செயலிகள் என 12 வங்கியில் ஒரே நேரத்தில் கடனை பெற வைத்து ரூ.62 லட்சம் பணத்தை விக்னேஷ் மற்றும் அவர் மனைவி சிந்தியா ஆகியோர் அபிராமி- ராஜேஷ் தம்பதியிடம் பணம் பெற்றார்களாம். ஒரு சில மாதங்கள் மட்டும் முதலீடு லாபத்தொகையான ரூ.3 லட்சத்தை ராஜேஷுக்கு கொடுத்துள்ளனர். அதன் பின்பு விக்னேஷ் கூறியபடி ராஜேசுக்கு பணத்தை திருப்பி தரவில்லையாம்.. கிட்டத்தட்ட ஒரு கோடி லாபம் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 62 லட்சத்தை ஏமாற்றி உள்ளாராம் விக்னேஷ். அவரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு மக்களை சதுரங்க வேட்டை பட பாணியில் நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிப்பது அதிகமாக நடக்கிறது. மதுரை தேனி மாவட்டங்களில் ஒரு நபர், ஒரு குடோனை வாடகைக்கு எடுத்தார். அதில் பருப்பு ஆரம்பித்து உள்ளதாக நம்ப வைத்தார். அந்த குடோன் தனக்கு சொந்தம் என்று முதலில் ஊரில் சிலரை நம்ப வைத்தார். பின்னர், கடனில் ஒரு கார் வாங்கினார். கவரிங்கில் 10 செயின் வாங்கி போட்டு பந்தாவாக சுற்றினார்.

வீடு தேடி வந்த வட்டி
அவரை சுற்றி வருபவர்களுக்கு இலவசமாக டீ, காபி, வடை, சாப்பாடு என அவ்வப்போது வாங்கி கொடுப்பார். அவர்களிடம் எனக்கு லாபம் அதிகமாக வருகிறது. தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும். எனக்கு கடன் கொடுத்தால் மாதம் 5 வட்டி தருகிறேன். சில லட்சங்கள் வேண்டும் என்று கேட்டார். அவரை பார்த்து ஏமாந்த அவர்கள் ஊரில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார்கள். சிலர் அவர் கேட்டபடி லட்சங்களும் கடனை கொடுத்துள்ளார்கள். ஒரு ஐந்து பேரிடம் ஐந்து லட்சம், 4 லட்சம் என வாங்கி உள்ளார். அவர்களுக்கு ஒன்றாம் தேதி வீடு தேடி சென்று வட்டி தொகையை கொடுத்துள்ளார்.
கடன் தந்துள்ளார்கள்
அதை பார்த்த அவர்கள், உறவினர்களிடம் கூறுகிறார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என எல்லாரும் போட்டி போட்டு கடன் கொடுக்கிறார்கள். இப்படியே மதுரை, தேனி மாவட்டத்தில் கணிசமான நபர்கள் அவர்களுக்கு கடன் தருகிறார்கள். இவரிடம் வாங்கிய பணத்தில் அவருக்கு வட்டி கட்டுவது, அவரிடம் வாங்கிய பணத்தில் இன்னொருவருக்கு வட்டி கட்டுவது என கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை வட்டி சரியாக கொடுத்து பல கோடிகளை கடன் வாங்கி விட்டார்.
48 கோடி மோசடி
அந்த பணத்தை எல்லாம் ஒரு நாள் சுருட்டிக்கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்டார். ஊரே கண்ணீர் விட்டு அழுகிறது.. பல கிராமங்களில் மக்கள் பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். மொத்தம் 48 கோடி ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது. அவர் இன்று வரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.. மக்கள் அதிக வட்டி தருகிறார் என்று நினைத்து ஏமாந்தனர். இது போல் பலமுறை நடந்துள்ளது. இப்போது புதிதாக ஷேர்மார்க்கெட்டில் மோசடி என்று வந்துள்ளது. சென்னை அருகே திருவள்ளூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஒரே நேரத்தில் பல கடன்கள்
இதையடுத்து மனம் மாறிய ராஜேஷை, ஒரே நேரத்தில் மொத்தமாக ஏமாற்ற முடிவு செய்த விக்னேஷ் பலே திட்டமிட்டாராம். கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் செயலிகள் என 12 வங்கியில் ஒரே நேரத்தில் கடனை பெற வைத்து ரூ.62 லட்சம் பணத்தை விக்னேஷ் மற்றும் அவர் மனைவி சிந்தியா ஆகியோர் அபிராமி- ராஜேஷ் தம்பதியிடம் பணம் பெற்றார்களாம்.
இந்த நிலையில், ஒரு சில மாதங்கள் மட்டும் முதலீடு லாபத்தொகையான ரூ.3 லட்சத்தை ராஜேஷுக்கு கொடுத்துள்ளனர். அதன் பின்பு விக்னேஷ் கூறியபடி ராஜேசுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. எனவே வாங்கிய கடனை திருப்பி தரக்கோரி விக்னேஷிடம் கேட்டும் அவர் காலம் தாழ்த்தி வந்தாராம். இதனால் மோசடி செய்துவிட்டதை உயர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் மணவாளநகர் போலீஸ் நிலையம் மற்றும் திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆனால் புகார் மனுவை போலீசார் முறையாக விசாரிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மோசடி செய்ததாக விக்னேஷ், சிந்தியா உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இத்தகைய வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி நிர்மல்குமார் புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
விக்னேஷ் கைது
நீதிமன்ற உத்தரவுபடி 3 பேர் மீதும் திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமாரியில் பதுங்கி இருந்த தனியார் நிறுவன ஊழியரான விக்னேஷை கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஏமாறக்கூடாது
பணம் அதிகமாக கிடைக்கும், கோடிகளில் லாபம் கிடைக்கும் என்று சொன்னால் நம்பவே கூடாது. பணம் தொடர்பாக, குறிப்பாக முதலீடு தொடர்பாக தகவல்கள் வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கி மற்றும் செபி அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் மட்டுமே நாட வேண்டும். அவர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை கூறமாட்டார்கள். அதேபோல் மோசடி செய்பவர்களை நம்பி ஏமாறுவதும் தடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications