அவரை பற்றி என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. அங்க போய் கேளுங்க.. பிரஸ் மீட்டில் ஆவேசம் அடைந்த அண்ணாமலை!
கன்னியாகுமரி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,368 கோடி நிதி வழங்கிய லாட்டரி மார்ட்டின் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் ஆவேசம் அடைந்தார் அண்ணாமலை. “இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்” என கோபமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திர நிதி விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. பாஜக, 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது.

வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது.
எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என்பது தெரியவரவில்லை. தேர்தல் பத்திர எண்கள் இன்னும் வெளியிடப்படாததால் எந்த அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுத்தது எனத் தெரியவில்லை.
எனினும், லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் நன்கொடை அளித்த சமயத்தில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்ததால், பாஜகவுக்கு தான் அவர் நிதி கொடுத்திருக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதேபோல பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு விசாரணை அமைப்புகள் மூலமாக ரெய்டு விட்டு, பாஜக நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன,
இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விமான நிலையத்தில், லாட்டரி மார்ட்டின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ள விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி? அதை நோண்டுங்க.. அண்ணாமலை ஆவேசம்!
இந்தக் கேள்வியால் டென்ஷன் ஆன அண்ணாமலை, “இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேக்குறீங்க? இதை நீங்கள் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனிடம் கேட்க வேண்டும். எதற்கு திருமாவளவன் ஆதவ் ஆர்ஜுனை ரைட் ஹேண்டாக வைத்திருக்கிறார்? எதற்காக ஆதவ் அர்ஜுன் அண்ணா அறிவாலயத்தில் சுத்திட்டு இருக்காரு? எதுக்கு ஆதவ் அர்ஜுன் முதல்வர் ஸ்டாலினின் சோஷியல் மீடியா அட்வைசரா இருக்காரு?
எதற்காக ஆதவ் அர்ஜுனுக்கு பொதுத்தொகுதி வேண்டும் என திருமாவளவன் தலைகீழா நின்னார்?ஆகவே, மார்ட்டின் சம்பந்தப்பட்ட எந்த கேள்வியாக இருந்தாலும், அதை ஆதவ் அர்ஜுனிடம் போய் கேளுங்க. என்கிட்ட ஏன் கேக்குறீங்க? நான் என்ன ஆதவ் அர்ஜுனா? ஆதவ் அர்ஜுன் விசிகவில் இருக்கிறார். விசிகவுக்கு போவதற்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார். அந்த நிறுவனத்தில் நான் இல்லை.. என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என ஆவேசமாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications