கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமர் கற்பனையா? விட மாட்டோம்.. திமுக எம்எல்ஏ மன்னிப்பு கேட்கனும்! புது பிரச்சனையோடு வந்த அண்ணாமலை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் ராமர் கட்டுகதை எனவும் ராமர் என்பது கற்பனை கதாப்பாத்திரம் என்றும் பேசிய காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். திமுக தமிழ்நாடு ஆளுநரை வில்லனாக சித்தரித்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்து சமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பில் 19 வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்து மக்கள் மனதை புண்படுத்தி உள்ளனர்.

Z பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் இந்த உத்தரவு நெருடலாகத்தான் உள்ளது.. வேறு வழியில்லை.. அண்ணாமலை! Z பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் இந்த உத்தரவு நெருடலாகத்தான் உள்ளது.. வேறு வழியில்லை.. அண்ணாமலை!

எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றிபெற்று சென்ற காங்கிரஸ் திமுக, எம்எல்ஏக்கள் இந்துமக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும்வரை பிரச்சனையை விடபோவதில்லை. தனக்கு வழங்கபட்ட இசட் பிரிவு பாதுகாப்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தூண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு

இசட் பிரிவு பாதுகாப்பு

ஏன்? எதற்காக வழங்கபட்டது? என மத்திய அரசிடம் கேட்கப்போவதில்லை. அதேவேளையில் கட்சியில் செய்ய வேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படகூடாது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்ததிற்கு உரியது. அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த திமுக அரசு அவசரப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை. தனியார் துறையில் ஆண்டிற்கு பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அரசுத் துறையில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டது. மொத்த ஆட்சியில் 3ல் ஒரு பங்கு முடிந்துள்ளது.

ஆளுநரை எதிரியாக சித்தரிக்கிறது

ஆளுநரை எதிரியாக சித்தரிக்கிறது

ஆனால் இதுவரையிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று ஆறு மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசால் எப்படி வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். திமுகவுக்கு எப்போதும் எதிரி வேண்டும். திரைப்பட அரசியலின் படி திரைப்படத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது.

மானம் போய்விடும்

மானம் போய்விடும்

ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சனையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை. திமுகவினர் ஆளுநரை சீண்டி வருகின்றனர். மேற்குவங்கம். கேரளாவைபோல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக்கொண்டிருந்தால் ஆளுநர் அமைதி காப்பாரா? என்பதை கூற இயலாது.

அதிமுகவுடன் கூட்டணியா?

அதிமுகவுடன் கூட்டணியா?

2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும். திமுகவை போல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்காது. பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை போன்றவற்றில் பிரச்சனை இருக்கதான் செய்கிறது. எனினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கபடும்." என்றார்.

English summary
Tamil Nadu BJP leader Annamalai has insisted that the Congress and DMK MLAs should apologize to the Hindu people for saying that Ramayana Rama is a myth and Rama is a fictional character.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X