ஒட்டுத்துணி இல்லாம.. சிக்கிய குமரி பாதிரியார்! தோண்ட தோண்ட ஆபாசம் - வழக்குப்பதிவு செய்த குமரி போலீஸ்
கன்னியாகுமரி: தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாசமாக வீடியோகால் பேசி பணம் கேட்டு மிரட்டிய பாதிரியார் பெனெடிக் ஆண்டோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த வாரம் அவரை தாக்கிய மர்ம நபர்கள் லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் அந்த லேப்டாப்பில் இருந்த பல அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

பெண்களுடன் பேச்சு
இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி தொடர்ந்து பேசி வந்து இருக்கிறார். அதன் பின்னர் வாட்ஸ் ஆப் மூலமாக அவர்கள் பேசத் தொடங்கிய அவர், பெண்களிடம் நாளாக நாளாக ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக வீடியோ கால் மூலமாக பெண்களிடம் பேசி இருக்கிறார் பெனெடிக் ஆண்டோ.

கல்லூரி மாணவிகளுக்கு குறி
பெரும்பாலும் இவர் அதிகம் பேசுவது கல்லூரி மாணவிகள்தான் என்கிறார்கள். அவரது பேச்சு மயங்கி சில பெண்களிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசி அதை ரெக்கார்ட் செய்தும் வைத்து இருந்துள்ளார் ஆண்டோ. அதேபோல் நேரிலும் பெண்களிடம் பாதிரியார் தவறாக நடந்துகொண்டதாகவும், ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

நர்சிங் மாணவி புகார்
இதற்கு அஞ்சிய பெண்கள் அவர் கேட்ட பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பென்னடிக் ஆண்டோ மீது பாலியல் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அந்த புகாரை பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்கள் கசிந்ததால் அவர் தலைமறைவானார்.

புதிய மதபோதகர்
பாதிரியாராக பணிபுரிந்து வந்த தேவாலயத்தில் இருந்தும் பென்னடிக் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மாற்றாக புதிய மதபோதகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே வெளியான ஆபாச வீடியோக்களில் இடம்பெற்ற பாதிரியாரால் ஏமாற்றப்பட்ட பெண்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்து இருந்தனர்.

வழக்குப்பதிவு
பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் விபரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்களின் ரகசியத்தை காப்பதாகவும் போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில்தான், 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது நாகர்கோயில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications