எங்களுக்கு இதான் வேலையா? - மின்வாரிய பொறியாளர் அலட்சியம்.. தீயாகப் பரவும் ஆடியோ!.. ஏற்கனவே சம்பவம்?
கன்னியாகுமரி : குமரி மாவட்டம் களியக்காவிளையில் மின் கம்பி அறுந்து கிடப்பதாக தகவல் கூறிய நபரிடம் மின்வாரிய அலுவலக பொறியாளர் அலட்சியமாக பதில் கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
தங்கள் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து ஆபத்தான முறையில் கிடப்பதாக போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்த நபரிடம் மின் வாரிய பணியாளர் ஒருமையில் பேசியுள்ளார்.
புகார் அளித்த நபரிடம் அலட்சியமாக பதில் அளிக்கும் மின் வாரிய பொறியாளர் தொடர்பான உரையாடல் ஆடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஒருசில இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் கம்பங்கள் சேதமடைந்தும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதியில் உள்ள சாலையின் நடுவே மின் கம்பி ஒன்று வாகனம் செல்லும்போது அறுபட்டு சாலையில் ஆபத்தான முறையில் விழுந்து கிடந்துள்ளது.

அலட்சிய பதில்
மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த நிலையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாமல் விரைந்து அதைச் சீர்செய்யுமாறு ஒரு நபர் களியக்காவிளை மின்வாரிய அலுவலக பொறியாளரை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நபரிடம் அலுவலக பொறியாளர் அலட்சியமாக பதில் கூறும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

எங்களுக்கு இதான் வேலையா?
அந்த ஆடியோவில் பேசும் பொறியாளர், "உங்களுக்குதான் அடிக்கடி சர்வீஸ் வொயர் கட்டாகுது.. சும்மா எப்படி கட் ஆகும்? எங்களுக்கு இதான் வேலையா? உன் மேல போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன்." என ஒருமையிலும் பேசுகிறார். பதிலுக்கு எதிர் தரப்பில் பேசும் நபரும் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த ஆடியோ வேகமாகப் பரவி வருகிறது.

முன்பே ஒருமுறை
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தின் சேவை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மின்தடை தொடர்பாக கேள்வி கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications