பயாலஜி இல்லை.. 'பலான பாடம்..' ஆசிரியர் சேட்டை.. ஷாக்கான மாணவிகள்! போக்சோவில் கைது செய்த குமரி போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேல் நிலைப்பள்ளியில், வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பள்ளி ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆசானாக இருந்து அவர்களுக்கு நல்வழிகளை எடுத்துக் கூற வேண்டிய ஒரு சில ஆசிரியர்கள், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும்போதிலும், இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெற்றுதான் வருகின்றன. அப்படியொரு சம்பவம், இரணியல் அரசுப் பள்ளியில் அரங்கேறியுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கிறிஸ்துதாஸ் என்பவர், அக்கவுண்டன்சி பிரிவில் 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு பாடம் எடுத்து வந்துள்ளார்.

வகுப்பறையில் ஆபாச பாடம்
ஆசிரியர் கிறிஸ்துதாஸ், வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது, மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசிவருவதாக தொடர்ந்து அவர் மீது புகார் எழுந்து வந்தன. ஆசிரியரின் இந்த நடவடிக்கை குறித்து, பள்ளியில் பயின்று வரும் மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. எனினும், புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பள்ளிக்கூடம் முற்றுகை
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த 6-ம் தேதி, பள்ளிக்கு வந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு, ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்களின் வாக்குவாதத்தை அடுத்து, பள்ளிக்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள், புகாருக்கு ஆளான ஆசிரியர் கிறிஸ்துதாசிடம் விசாரணை மேற்கொண்டார். எனினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாவட்ட காவல் ஆணையரிடம் புகார்
இதனால் பொறுமையிழந்த மாணவிகளின் பெற்றோர், நேற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வகுப்பறையில் ஆபாசமாக பேசிவரும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். ஆசிரியரின் மோசமான இதுபோன்ற நடவடிக்கையால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல அச்சப்படுகின்றனர் என்றும், எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது
இதனையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர் கிறிஸ்துதாஸை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் கல்விதுறை அதிகாரிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications