மாதம் ரூ.1 லட்சம் மின் கட்டணம்.. இப்போது சூரிய ஒளி மின் உற்பத்தியால் வருடம் ரூ.7.75 லட்சம் வருவாய்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கலங்கரை விளக்கத்தில் முன்பு மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேலாக மின்கட்டணம் செலுத்த வேண்டி நிலை வந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்உற்பத்தி கூடத்தால் ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வருவாய் கிடைப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கடற்கரைகள் சிறந்த சுற்றுலா தலங்களாக திகழ்கின்றன. குறிப்பாக முட்டம் கடற்கரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மிகவு பிடித்த கடற்கரையாகும். இயற்கை அழகு அப்படியே கொட்டிக்கிடக்கும் இந்த கடற்கரையை காண இரண்டு கண்கள் போதாது. வந்தவர்களை திரும்ப சென்றுவிடாமல் பிடித்து வைத்துக்கொள்ளும் சக்திக முட்டம் கடற்கரைக்கு உண்டு. இந்த முட்டம் கடற்கரையில் ஏராளமான சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஏராளமான சீரியல்களும் முட்டம் கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ளது.

முட்டம் கடற்கரையில் உள்ள மிகவும் பழமையான கலங்கரை விளக்கம் பலருக்கும் பிடித்த இடம் ஆகும். இது மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் சென்னை கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்கு கலங்கள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தின் அருகே கடந்த 2017-ம் ஆண்டு பழம்பெரும் கலங்கரை விளக்க கடல்சார் அருங்காட்சியகம் குளிர்சாதன வசதியுடன் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட கப்பல்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் வகைகள், கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை இடம்பெற்று உள்ளது. முட்டம் கலங்கரை விளக்கத்தின் அருகில் உள்ள அலுவலகத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம், புயல் போன்றவற்றை அறிவிக்கும் விதமான தொலைத்தொடர்பு நிலையமும் இயங்கி வருகிறது.
கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், மீனவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்வதற்கான டிரான்ஸ்மீட்டர் போன்றவற்றுக்கு மின்சாரம் மிக அதிகமாக தேவைப்படும் நிலை உள்ளது.. அருங்காட்சியகம் அமைப்பதற்கு முன்பு கலங்கரை விளக்கம் மட்டும் இருந்தபோதே மாதம் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை மின்கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
அதன்பின்னர் 35 டன் ஏசியுடன், நவீன மின் விளக்குகள் வசதியோடு அருங்காட்சியகம் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அலுவலகம், ஆய்வு இல்லம் உள்ளிட்டவைக்கும் சேர்த்து ஒரு மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து மின்கட்டண செலவைக் குறைக்கும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டில் கலங்கரை விளக்கத்தின் அருகிலேயே 25 கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டது. அந்த தகடுகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.19 கிலோ வாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நேரடியாக மின்வாரியத்துக்கு கொடுக்கப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்து கொடுக்கப்படும் மின்சாரத்துக்கான தொகையை மின்வாரியம் கலங்கரை விளக்கம் செலுத்தவேண்டிய கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படுகிறது.
இதனால் கலங்கரை விளக்கம் மட்டும் இருந்தபோது ஒரு மாதத்துக்கு ஆகும் மின்கட்டணத் தொகையான ரூ.35 ஆயிரம்தான் தற்போதும் செலுத்தி வருகிறதாம். எனவே இந்த சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டத்தால் மாதத்துக்கு ரூ.65 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக கலங்கரை விளக்க அதிகாரிக தெரிவித்தனர். அதேநேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும்போதும், மழை பெய்யும்போது குறைவான மின் உற்பத்தி இருக்கும். அப்போது மட்டும் மின்கட்டணம் சற்று அதிகமாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications