கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் ஸ்ரீதர் முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் மார்கழி தேர்திருவிழாவையொட்டி விடுமுறை வழங்கி கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவுக்கு கன்னியாகுமரி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வார்கள்.
இந்நிலையில் தான் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நளான தேர்த்திருவிழாவை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

26.12.2023 அன்று விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது சனிக்கிழமை (20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
இருப்பினும் 26.12.2023ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொரட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்'' என கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்ள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications