அம்மா மட்டுமல்ல.. மகள்களையும் விட்டு வைக்காத காம கொடூரன்.. சரமாரி வெட்டி கொலை!

பாலியல் வன்கொடுமை தந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அம்மா மட்டுமல்ல.. மகள்களையும்விட்டு வைக்காத காம கொடூரனை ஹாலிவுட் ஸ்டைலில் கொன்று சாய்த்தார் மகன்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வசித்து வந்தவர் அலெக்சாண்டர்.. வெளிநாட்டில் வேலை பார்த்தவர்.. சில வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி கட்டுமான வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவரை போன 25 ந்தேதி யாரோ கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. அவரது முகம், உடம்பு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.. அதனால் இந்த விசாரணை போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. அதனால் அலெக்சாண்டரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.

விசாரணை

விசாரணை

அப்போது ஒரு பெண்ணிடம் அலெக்சலாண்டர் அடிக்கடி போன் பேசி வந்தது தெரியவந்தது.. மேலும் அந்த பெண்ணின் மகள்களிடம் அலெக்சாண்டர் நிறைய போன் செய்து பேசியுள்ளதும் கண்டறியப்பட்டது. அதனால் அந்த பெண் யார் என்று விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.. ஆனால், அவரும், அவருடைய மகள்களும் மாயமாகி இருந்தனர்.. அதனால், பெண்ணின் மகன் ஜவஹரிடம் விசாரித்தபோதுதான் பகீர் தகவல் வெளியானது.

மகள்கள்

மகள்கள்

சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம்.. இந்த சமயத்தில்தான் அலெக்சாண்டருக்கு அந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. இருவரும் பலமுறை ஜாலியாகவும் இருந்துள்ளனர்.. ஆனால், அலெக்சாண்டர் பெண்ணின் மகள்களிடமும் தன் வேலையை காட்ட தொடங்கி உள்ளார்.

மகன் ஜவஹர்

மகன் ஜவஹர்

ஒருகட்டத்தில் பெண்ணும், மகள்களும் அலெக்சாண்டரின் பிடியில் வசமாக சிக்கி தவித்தனர்.. விஷயம் மகன் ஜவஹருக்கு தெரியவந்தது.. அதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலெக்சாண்டரை கொல்ல முடிவு செய்தார்.. அதற்காக தாயையும், சகோதரிகளையும் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்.

மிளகாய் பொடி

மிளகாய் பொடி

அதன்படி, 25 ந்தேதி பைக்கில் அலெக்சாண்டர் வரும்போது, இன்னொரு பைக்கால் மோதி அவரை கீழே விழ வைத்து.. மிளகாய் பொடியை அவர் மீது தூவி, அதன்பிறகு சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர்.. இதற்கு பிறகு எல்லாரும் போய் பக்கத்தில் இருந்த ஓடையில் குளித்து விட்டு கிளம்பி சென்றிருக்கிறார்கள்.. விட்டு தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இப்போது கும்பலாக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+