கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பாடு எங்க?.. அலட்சிய அதிகாரிகளை நிவாரண முகாமில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய அமைச்சர்- வீடியோ

Google Oneindia Tamil News

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பிலிருந்து மீட்ட மக்களை நிவாரண முகாம்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு உணவு, மின்சாரம், போர்வை உள்ளிட்ட வசதிகளை இரவு வரை செய்து கொடுக்காத ஆசிரியர்களிடம் கடுங்கோபத்தை காட்டினார் அமைச்சர் மனோ தங்கராஜ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர் உடனடியாக அந்த வசதிகளை செய்து கொடுக்க சொல்லி, மின்சாரம் வந்ததும் அந்த இடத்தை விட்டு அவர் நகர்ந்தார்.

குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்கள் வெள்ள காடானது. இதை நேற்று காலை முதலே பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார் அமைச்சர் மனோதங்கராஜ்.

அவர் ஆய்வு செய்வது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டும் வந்தார். இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

கிழக்கு கடற்கரை வீட்டில் ஆள் நடமாட்டத்தை காட்டும் சேட்டிலைட் இமேஜ்! அப்போ கிம் ஜாங்கிற்கு என்னாச்சு?கிழக்கு கடற்கரை வீட்டில் ஆள் நடமாட்டத்தை காட்டும் சேட்டிலைட் இமேஜ்! அப்போ கிம் ஜாங்கிற்கு என்னாச்சு?

வைக்கலூர்

வைக்கலூர்

இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு வைக்கலூர் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் கலிங்கராஜபுரத்தில் தங்க வைக்கப்படுள்ளனர் என்பதை அறிந்து அங்கு சென்ற அமைச்சருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து காலையிலேயே வெளியேற்றப்பட்டு அந்த முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மின்சார வசதி, பெட்ஷீட், தலையணை என்று எதுவும் அளிக்கப்படவில்லை என அங்கிருந்த மக்கள் புகார் தெரிவித்தனர்.

கண் கூடாக

கண் கூடாக

அவர்களது நிலையை அமைச்சர் மனோ தங்கராஜும் கண்கூடாக பார்த்தார். இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற அமைச்சர் அதிகாரிகளை லெப்ட் ரைட் என்று வாங்கினார். ஏன் இதுவரை மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை? அத்தனை பெண்களும் இருட்டில் அல்லவா இருக்கின்றனர்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

போர்வை

போர்வை

மேலும் பெட்ஷீட் போர்வை எங்கே? உணவு எங்கே? எப்போது உணவு வரும்? உணவு எங்கே இருந்து வருகிறது? என்று துருவி துருவி அதிகாரிகளை கேள்வி கேட்டார். இதனால் ஆடி போன அதிகாரிகள் உடனடியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். அதிகாரிகள் உறுதி அளித்தும் அங்கு இருந்து செல்லாத அமைச்சர் மனோதங்கராஜ், உணவு, பெட்ஷீட், போர்வை, தலையணை, முக்கியமாக மின்சார வசதி என்று அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது என்பதை களத்தில் நின்று உறுதி செய்தார்.

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

பின்னர் மக்களிடம் சென்று பேசிய அமைச்சர் , வைக்கலூர் பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும் என்று உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்தனர். எவ்வளவு கேட்டும் அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று கூறி வேதனையடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் இருந்து அமைச்சர் பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். சில அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மக்களை பாதிப்படைய செய்வது மட்டுமல்லாமல், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுகிறது. அமைச்சர் மனோதங்கராஜின் இந்த அதிரடி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
Minister Mano Thangaraj gets angry on officials who neglected their duties in relief camps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X