கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப். 19ல் கன்னியாகுமரியில் பாஜக கூட்டம்.. உரையாற்ற வருகிறார் மோடி.. பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைக்கவும், கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் பாலங்களைத் திறந்து வைக்கவும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகிறார் என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எப்போதும் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் மோடி, இப்போதெல்லாம் இந்தியாவை சுற்றி வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டுதான் பிரதமர் இவ்வாறு செய்கிறார் என்று எதிர்கட்சிகள் கேலி செய்வது ஒரு பக்கம் இருக்க, ஜனவரி மாதத்தின் 27ம் தேதியான நேற்றுதான் தமிழகம் வந்திருந்த அவர், வருகிற பிப்ரவரி 19ம் தேதியும் தமிழகம் வருகை தருகிறார்.

modi to visit kanyakumari february

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். குமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்டுள்ள சாலை, மற்றும் பாலங்கள் திறப்புவிழா விழாவில் கலந்து கொள்ளவும் வரும் பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி நான்கு வழி சாலை தொடக்க பகுதியில் (ஸீரோ பாயிண்டில்) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு கிடைத்த கொடை ஆவார். டெல்லியில் இருப்பது போல் ஒரு மருத்துவமனையைநேற்று மதுரையில் வர பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் போதும் அது திருநாளாக மாறுகிறது. தமிழக முன்னேற்றத்திற்கு மத்திய அரசு லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் 40 ஆயிரம் கோடிகள் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்கவும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தியதி கன்னியாகுமரி வருகிறார்.

கன்னியாகுமரி நான்கு வழி சாலை தொடங்கும் (ஸீரோ பாயிண்ட் ) இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார் என்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

English summary
Prime Minister Narendra Modi is coming to Kanyakumari on February 19th to arrange various welfare schemes and to open the bridges that are being completed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X