ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா! பட்டு போல் பளபளக்கும் சாலைகள்! குமரியில் குவியும் கதர்ச்சட்டையினர்!
கன்னியாகுமரி: வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைபயணம் செல்லவுள்ளதால் சாலைகள் அனைத்தும் புதுப் பொலிவு பெற்று வருகின்றன.
ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அணி திரண்டு இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளதால் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் செப்பனிப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கன்னியாகுமரியிலேயே முகாமிட்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவுக்கான முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறார் விஜய் வசந்த் எம்.பி.

ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் தேசமே ஒன்றிணைவோம் என்ற நடைபயணத்தை வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதோடு ராகுல் காந்தியுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்கிறார். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் வேகமாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

புதிய சாலைகள்
குறிப்பாக ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் பல இடங்களில் புதிய சாலைகளே அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தரப்பில் விடுத்த கோரிக்கையை தட்டாமல் செய்து கொடுத்திருக்கிறார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. புதிய சாலைகள் அமைக்கும் பணியை நாடாளுமன்ற உறுப்பினரும், பாரத் ஜோடோ யாத்ராவின் தமிழக வரவேற்புக் குழு பொறுப்பாளருமான விஜய் வசந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

விஜய் வசந்த்
ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் இப்போதே கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 25 கிமீ தூரம் வரை இலக்கு நிர்ணயித்துள்ள ராகுல் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,700 கிலோ மீட்டர் பயணித்து காஷ்மீரை அடைய திட்டமிட்டுள்ளார். இதனிடையே நாகர்கோவில், கன்னியாகுமரி என பல இடங்களில் காங்கிரஸ் சுவர் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.

இது தான் ஹைலைட்
கடந்த சில வருடங்களாக சோர்ந்து காணப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளும் ராகுலின் இந்த 3 நாள் தமிழக நடைபயணம் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடைபயணம் செல்லும் தடங்களில் புது சாலைகள் அமைக்கப்படுவது தான் இதில் ஹைலைட்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications