ராகுல் காந்தி நடைபயணம் - மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக புரட்சி - கே.எஸ் அழகிரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம், நாட்டில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக புரட்சிப் பயணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் நடைபயணத்தை, வரும் 7-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியவதாவது: மத்திய நிதி அமைச்சர், ஒரு மாநிலத்திற்கு சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. இதில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்சனை வேறு மாதிரி திரும்பியிருக்கும்.

பிரச்சனைகளை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்.
சுதந்திரத்திற்கு முன்பு, நாட்டில் தீண்டாமை, சமூக நீதி, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஜாதி வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது, அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்று, ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது, சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த நிலைமையை போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள்.

சமூக புரட்சிப் பயணம்
இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகத்தான், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக புரட்சிப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, 3,500 கிலோ மீட்டர் தூரம் அவர் பயணம் செய்ய உள்ளார். மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாகவோ, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலோ நோக்குவது கிடையாது. அவர்களே தனிப்பட்ட முறையில் இயங்கி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளால், நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்த பயணம்
தேசத்தின் இறையாண்மையை காக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த நோக்கில் இந்த நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஜிஎஸ்டி-யில் குறைந்த நிதியை ஈடு செய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருப்புப் பணம்
கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கருப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை. வங்கியில் 15 ரூபாய் கூட போடப்படவில்லை. இவற்றையெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications