குலாப் புயல் புண்ணியத்தால் குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - கேரளாவில் ரெட் அலெர்ட்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகள், அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: குலாப் புயல் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் சலோம் நகரில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே நீடித்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள சலோம் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது, இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ,கோதையாறு,சிற்றாறு போன்ற மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் குலசேகரம், அருமனை மார்த்தாண்டம்,கடையாலுமூடு, பனச்சமூடு ,களியக்காவிளை போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி , சிற்றாறு போன்ற அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.37 அடியாகவும், நீர் வரத்து 2572 கன அடியாகவும் உள்ளது. இதனால் நீர்மட்டம் அதிகரித்து வந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3294 கன அடி வெள்ளம் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 59.65 அடியாக உள்ள நிலையில் 1847 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சிற்றாறு -1, சிற்றாறு -2 அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் ரெட் அலெர்ட்
கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்க்கு அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலமான தற்போது கேரளா மாநிலத்திற்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கேரளா மாநிலத்தின் இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து மாநில அரசு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளதால் மழைக்காலத்தில் மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications