கன்னியாகுமரி அருகே நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்.. எமனாக எதிரே வந்த வாகனம்.. இரக்கமற்ற டிரைவர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் ஜான்சன் என்பவர் நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இவர் களியங்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் எமனாக வந்துள்ளது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கொஞ்சம் கவனம் சிதறினாலும், அவர்களுக்கு சிக்கலாகிவிடும். ஏனெனில் அந்த அளவிற்கு நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துவிட்டது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தான் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது மோதும் வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்தி அவர்களை காப்பாற்றக்கூட முயற்சிப்பது இல்லை.. அவர்கள் இரக்கமே இல்லாமல் ஓடிப்போய்விடுகிறார்கள்.

சிலர் மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில், அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூட நினைக்காமல் வேகத்தை சிறிதும் குறைக்காமல் ஓடிப்போய்விடுகிறார்கள். அவர்கள் அப்படி செல்லும் போது சிசிடிவி காட்சிகள் இருந்தால் மட்டுமே பிடிபடுவார்கள். மாறாக விபத்தை ஏற்படுத்திய யாராவது பார்த்தால் தான் சிக்குவார்கள். மாறாக யாருமே அந்த இடத்தில் இல்லை என்கிற நிலையில், அடையாளம் தெரியாத வாகனம் அடையாளப்படாமலேயே எஸ்கேப் ஆகிவிடும். விபத்தை ஏற்படுத்தியவரின் மனசாட்சியை தவிர உலகில் யாருக்குமே தெரியாமலும் போகும். அப்படி ஒரு சம்பவம் தான் நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் ஜான்சன் என்பவர், நாகர்கோவில் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மகன் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
சம்பவம் நடந்த அன்று காலையில் ஜான்சன் வேலைக்கு செல்வதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையில் இருந்து களியங்காடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள டீக்கடை அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென ஜான்சனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அத்துடன் அந்த வாகனம் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண்சன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜான்சன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் அந்த பகுதியில் பதிவான வாகன காட்சிகளை அடிப்படையாக வைத்து வாகனங்களை தேடி வருகிறார்கள். பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications