Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பாடி கிடக்கு பாடி கிடக்கு'.. பதறியடித்து கிணற்றில் தேடிய போலீசார்..அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: செம போதையில் கிணற்றில் கல்லை தூக்கிப் போட்டு விட்டு தான் குதித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மனைவி, உறவினர்களை அலைக்கழித்த குடிபோதை ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    பாடி கிடக்கு பாடி கிடக்கு.. பதறியடித்து கிணற்றில் தேடிய போலீசார்..அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்!

    கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பகுதியினை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி சித்ரா. ராஜாமணி அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் சுற்றித்திரிவதாக தெரிகிறது.

    இந்த நிலையில், சம்பவத்தன்று இரவும் அவர் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

     தற்கொலை செய்யப்போறேன்...

    தற்கொலை செய்யப்போறேன்...


    இதில் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ராஜாமணி மனைவியிடம் கோபித்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். போதையில் தள்ளாடியபடியே சென்ற அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றும் புலம்பிக்கொண்டு சென்றுள்ளார்... ஆனால் மனைவி சித்ரா, போதை தெளிந்த பின்னர் எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வீட்டில் இருந்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவே இல்லை. மேலும் எங்கு தேடியும் காணவில்லை.

     கிணற்றுக்குள் குதித்து தற்கொலை

    கிணற்றுக்குள் குதித்து தற்கொலை

    இந்த நிலையில் கிணற்றுக்குள் குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக நினைத்த அவர், உடனடியாக கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர் ''எனது கணவர் ராஜாமணி குடித்துவிட்டு மதுபோதையில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துவிட்டதாகவும், நீங்கள் தான் எப்படியாவது அவரது உடலை மீட்க வேண்டும்'' என கூறியுள்ளார். இதையடுத்து போலீசாரும் உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமாருக்கு தகவலை தெரித்தார்.

     கிணற்றுக்குள் பாடி கிடக்குது

    கிணற்றுக்குள் பாடி கிடக்குது


    அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காலை 11:30 மணியளவில் கிணற்றுக்குள் இறங்கி ராஜாமணியை தேட தொடங்கினர். வீரர்கள் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க...மறுபக்கம் நவீன கேமராவினை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கு கிடைக்கிறது என்றும் தேடப்பட்டு வந்தது. இதற்கிடையே சித்ராவின் கணவர் ராஜாமணி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து சித்ரா மற்றும் ராஜாமணியின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து கதறி அழ தொடங்கினர்.

     பசி பட்டினியுடன் உடலை தேடினர்

    பசி பட்டினியுடன் உடலை தேடினர்

    மேலும் ராஜாமணியின் இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மற்றும் சொந்தம் பந்தத்தினர் செய்து கொண்டிருந்தனர். மேலும் வீட்டின் முன்பாக பந்தல் போட்டு மைக் செட் கட்டி ட்ரம் செட் காரர்களை வரவழைத்து உடல் கிடைத்ததும் இறுதிச்சடங்கு செய்ய தயார் நிலையில் காத்திருந்தனர். இதற்கிடையே உடலை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம் என்ற உறுதியுடன் தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமரன் தலைமையிலான வீரர்கள் மதியம் 3.30 மணி வரையிலும் தண்ணீர் குடிக்காமலும் உணவு அருந்தாமலும் பசி பட்டினியுடன் ராஜாமணியின் உடலை தேடி வந்தனர்.

     செம போதையில் கிடந்த ராஜாமணி

    செம போதையில் கிடந்த ராஜாமணி

    இந்த நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விடா முயற்சியினை பார்த்து, ஒரு நபர் ''நீங்க இப்ப யாரை தேடிக்கிட்டு இருக்கீங்க''... என்று கேட்க.. இதற்கு அவர்கள் ராஜாமணி என்று கூறியுள்ளனர்... ''அய்யயோ.. நீங்க இவ்ளோ நேரமா தேடிக்கொண்டிருந்த ஆளு அங்கு தோப்புக்குள்ள செம போதையில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கார் ஐயா''.. என்று தெரிவித்துள்ளார். இதனால் தலைசுற்றிப்போன போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தோப்புக்குள் சென்ற பார்த்த பொழுது ராஜாமணி அங்கே செம போதையில் ஹாயாக படுத்திருந்துள்ளார்.

     செந்தில் பட காமெடி போல

    செந்தில் பட காமெடி போல

    என்னப்பா இப்படி ஆகிப்போச்சே என்ற வேதனையில், போலீசாரும் தீயணைப்பு துறையினரும், ராஜாமணியை மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகாக அவர்கள் தண்ணீர் அருந்தி மீண்டும் குஜிலியம்பாறை நிலையம் சென்றடைந்தனர். இதற்கிடையே செத்துவிட்டார் என நினைத்து வீட்டு முன் டிரம் செட், பாடை கட்டிக்கொண்டிருந்த உறவினர்கள் மற்றும் சொந்த பந்தத்தினர் அதிர்ச்சியடைந்தனர். செந்தில் பட காமெடி போல் குடிபோதை ஆசாமி செய்த கலாட்டாவால் பாலவிடுதி காவல்துறையினரும், குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் பசி பட்டினியோடு பணியாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+