மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்கள் விமர்சனங்களை மதிக்க மாட்டேன்: கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்
கரூர்: திமுக ஆட்சி பற்றிய மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கக்கூடிய விமர்சனங்களைப் பற்றி மதிக்க விரும்பவில்லை. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கரூர் திருமாநிலையூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரமாண்ட அரசு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத்தொடர்ந்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 80,555 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்எல்ஏ-க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுவாக ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 6 மாதம் துறைகளை பற்றி தெரிந்துகொள்ள தேவைப்படும். ஆனால் திமுக ஆட்சியமைத்த முதல் நாள் முதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களுக்கு நானே மீண்டும் வந்து தொடங்கி வைப்பேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது. கடல் இல்லாத கரூருக்கு கடல் போல் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. எப்போதும் எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. மக்கள் பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியுள்ளோம்
திமுக ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த முகங்கள் மூலமாக திமுக ஆட்சி மக்களை முன்றேன்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது. மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் தான் அக்கப்போர் செய்யும் அரைவேக்காடு விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்கள் வைக்கக்கூடிய விமர்சனங்களைப் பற்றி மதிக்க விரும்பவில்லை.
திமுக ஆட்சி பற்றி மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்களிடம் கேட்காமல், மக்களிடம் கேளுங்கள். தூர்வாரிய பணிகள் மூலம் மஞ்சப்பை முன்னெடுப்புகள் வரை அனைத்தையும் கேளுங்கள் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications