உங்க பேச்சு எங்க போச்சு.. வாழ்வாதாரம் என்னா ஆச்சு.. எதுகை மோனையில் செந்தில்பாலாஜியை கேட்ட எம்.ஆர்.வி
கரூர்: ஆட்சிக்கு வரும் முன்பு தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில்பலாஜி கொடுத்த வாக்குறுதிகள் எங்கே போனது எனவும், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏராளமான வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தார்கள் ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சரும் கரூர் அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் ஆலயத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தினை துவக்கினார்.
கோயிலில் வழிபாடு நிகழ்த்திய பின்னர் திறந்த வெளி பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கிய அவர், பேசுகையில், இந்த நகரமைப்பு தேர்தலை நீதிமன்றத்தினை நாடி எப்படியாவது, நிறுத்த வேண்டுமென்று நினைத்தார்கள், ஆனால் உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டுமென்று உத்திரவு போட்டுள்ளது என்றார்.

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி
ஆளுங்கட்சியினர் எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலை நடத்த விரும்புவார்கள், ஏனென்றால் யார் ஆட்சியில் இருப்பார்களோ, அந்த கட்சிக்கு ஆதரவாக தான் தேர்தல் அமையும், ஆனால், தேர்தலை நடத்த திமுக விரும்பவில்லை என்றால், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிந்த 9 மாதம் துவங்குகின்றது. ஊழலும், அராஜகமும் அதிகமாக அரங்கேற்றியுள்ளது என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும், 10 ஆண்டு காலம் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி இருந்தது.

திமுக அளித்த வாக்குறுதிகள்
4 ½ வருடங்களாக தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வராக ஒ.பி.எஸ் அவர்களும் ஆட்சி புரிந்தனர். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்று மக்கள் விரும்பியுள்ளனர். ஆனால், ஏன் திமுக விற்கு வாக்களித்துள்ளோம் என்று நினைத்து பார்க்கின்றார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்தார்கள், ஆனால், எதையும் நடைமுறைப்படுத்த வில்லை, நீட் தேர்வு ரத்து, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூ மானியம் வழங்கப்படும், மாதம், மாதம் ரூ ஆயிரம் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என்றும், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள்., ஒன்றையும் நிறைவேற்றவில்லை, ஆனால் ஒன்றே ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

செந்தில்பாலாஜி குறித்து விமர்சனம்
என்னவென்றால் டவுன்பஸ்களில் மகளிருக்கு இலவசம் என்று கூறி அதிலும், 2 மணி நேரத்திற்கு ஒரு பேருந்தினை அறிவித்து அதில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என்று சென்று வருகின்றார்கள். 100 சதவிகிதத்தில் 80 விழுக்காடு பேருந்துகள் எல்.எஸ்.எஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றியுள்ளனர். நானும் அத்துறையில் மந்திரியாக இருந்தவர் என்பதினால் அதனை பற்றி நன்கு தெரியும் என்றதோடு, இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 11 மணிக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்பார், 11.05 க்கு மாட்டுவண்டி எடுத்து கொண்டு மணல் அள்ள செல்லுங்கள், எவனும் கேட்க மாட்டான், அப்படி கேட்டால் அந்த அதிகாரி இங்கே இருக்க மாட்டான் என்று பிரச்சாரத்தில் பேசி வாக்குகள் வாங்கினார்.

திமுகவின் குடும்ப ஆட்சி
இப்போது எங்க போச்சு, மாட்டுவண்டி மணல் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆச்சு, இதுமட்டுமல்ல, முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தங்கை கனிமொழி ஆகியோர் தந்தை முதல்வரானவுடன் உங்கள் விவசாய நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் வாக்குகள் கேட்டனர். ஆனால் என்னாச்சு, தற்போது ஏழைகளின் நகைகள் எல்லாம் ஏலத்திற்கு செல்ல உள்ளது. ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரூ 5 ஆயிரம் எங்கே, இந்த பொங்கலுக்கு என்ன கொடுத்தார்கள் தெரியுமா ? வெல்லத்திற்கு பதிலாக வெல்லப்பாகு கொடுத்தார்கள். திமுக ஆட்சி இன்று கிடையாது குடும்ப ஆட்சி தான், மகன், மருமகன் ஆகிய எல்லோரும் அரசியல் செய்தார்கள். திமுக அரசின் அவலநிலையை மாற்ற வேண்டுமென்றால் நடைபெற உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி மட்டுமில்லாது பேரூராட்சிகளில் அதிமுக சின்னத்தினை ஆதரித்து உள்ளாட்சியில் நல்லாட்சி பெற வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications