கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன்! அதுவும் இரட்டை இலை சின்னத்தில்..? என்ன ஆச்சு ஜோதிமணிக்கு?

Google Oneindia Tamil News

கரூர் :கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், சீமான் போன்ற ஆபாச வக்கிர எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, பேச்சின் இடையே தான் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்ததாக கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Recommended Video

    4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன்! அதுவும் இரட்டை இலை சின்னத்தில் - ஜோதிமணி

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து நிலையில் திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயார்..காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட 3 குழுக்கள் அமைத்த சோனியா

    ஆனால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

    காங்கிரஸ் ஜோதிமணி

    காங்கிரஸ் ஜோதிமணி

    இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நாம் தமிழர் கட்சி சீமானை மிக கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜோதிமணி போன்றோர் நாவை அடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி," ராஜிவ்காந்தியை முன்னாள் பிரதமர் என்று பாராமல் சீமான் பேசியதற்கு பதில் தெரிவித்திருந்தேன்.

    நாம் தமிழர் சீமான்

    நாம் தமிழர் சீமான்

    விஜயலக்ஷ்மி ஆதாரத்தோடு சீமான் மீது புகார் கூறியிருந்தார். அதையே நான் கூறினேன். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை தாக்கும் நோக்கத்தோடு பேசுகிறார். அவர் நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தை நாடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம். பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னை போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள்.

    பாஜகவின் பி டீம்

    பாஜகவின் பி டீம்

    இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது. சீமான் பாஜகவின் B டீம். கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கருத்து முரண்பாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என்று தெரிவித்தார்.

    இரட்டை இலை சின்னம்

    இரட்டை இலை சின்னம்

    இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது பேச்சின் இடையே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இரட்டை இலைச் சின்னத்தில் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம் என்று கூறினார். மேலும் தன்னை நம்பி இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்தார்கள் என்றும் அவர் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சக நிர்வாகிகள், 'கை கை' என கூறினர். இதையடுத்தே தான் மாற்றி பேசியதை உணர்ந்த ஜோதிமணி தான் போட்டியிட்டது கை சின்னத்தில் என தெரிவித்தார்.

    English summary
    Officials were shocked when Congress MP Jyoti Mani, who had said that Seeman should apologize to the public in the Karur parliamentary constituency and continue to skin obscene politicians like Seeman, stood in the double-leaf symbol between the speeches and claimed victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X