மொத்தமாய் புறக்கணிப்பட்ட பட்டியலின மக்கள்.. பள்ளபட்டி நகராட்சியில் பரபரப்பு புகார்.. பின்னணி என்ன?
கரூர் : கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஒரு வார்டு கூட பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படாத நிலையில் பட்டியலின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 490 பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் உரிய பிரநிதித்துவம் அளிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

பள்ளபட்டி நகராட்சி
இந்நிலையில்தான் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஒரு வார்டு கூட பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி உள்ளாட்சி அமைப்பின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துக்கள், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், 2019 வீட்டு வரி கேட்பின் அடிப்படையில் தயார் செய்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு 18ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம்
இந்த வார்டு மறுவரையறை கருத்துக்கள் மீது பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபனைகள், கருத்துக்களை நேரடியாக மனுக்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பேரூராட்சி அண்மையில் பள்ளப்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நிலையில் வார்டு வரையறை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

பட்டியலின் மக்கள் புறக்கணிப்பு
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், மொத்தம் உள்ள 27 வார்டுகளில் பொதுப்பிரிவு பெண்களுக்கு 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் , அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு 1 வார்டு கூட ஒதுக்கப்படவில்லை. பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்த போது 18-வார்டில், ஒரு வார்டு பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளில் பள்ளப்பட்டி நகராட்சியில் மட்டுமே பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் புகார்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இதற்கான அறிவிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அன்றே வேட்புமனுத் தாக்கலும் துவங்கிய நிலையில், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படவில்லையென தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளபட்டி பகுதியில் அதே புகார் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications