கல் குவாரி பற்றி புகார்.. விவசாயியை வேன் ஏற்றி கொன்ற உரிமையாளர்! உடலை பெற மறுத்து தொடரும் போராட்டம்
கரூர்: உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கல்குவாரிகள் இயங்கி வருகின்றனர். இது சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன
குறிப்பாக, உரிய அனுமதியில்லாமல் செயல்படும் கல்குவாரிகளை மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

கல் குவாரி
இந்தச் சூழலில் கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் குப்பம் அடுத்துள்ள காளிபாளையம் வெட்டுக்காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதான். 49 வயதான இவர், அங்குள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

மூட உத்தரவு
அங்குத் தென்னிலை அருகே தனியார் கல் குவாரி ஒன்றை செல்வகுமார் (45) என்பவர் நடத்தி வருகிறது. இந்த கல்குவாரிக்கான உரிமம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சட்ட விரோதமாக இதை செல்வகுமார் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கல்குவாரியை மூட வேண்டும் என்று ஜெகநாதன் தொடர்ச்சியாகப் போராடி வந்தார். இதனால் குவாரி உரிமையாளர் செல்வகுமார் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

கொலை முயற்சி
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகநாதனை கொலை செய்ய முயற்சியும் நடந்துள்ளது. அப்போதே ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் குவாரி உரிமையாளர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரி குறித்து புகார் அளித்து இருந்தார்.

கொலை
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் கனிம வளத் துறை சட்ட விரோதமாகச் செயல்பட்டு வந்த அந்தக் கல்குவாரியை மூடியது. இந்தச் சூழலில் தான், செப்.10ஆம் தேதி காருடையாபாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கல்குவாரிக்குச் சொந்தமான பொலிரோ வேன் ஒன்று ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

கைது
இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வாகனத்தை சக்திவேல்(24) என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் நடந்த போது வேனில் கல் குவாரி ஊழியர் ரஞ்சித்(44) என்பவரும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெகநாதன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார்(39), வேன் ஓட்டுநர் சக்திவேல், ரஞ்சித் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உறவினர்கள் போராட்டம்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், ஜெகநாதனின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி அவரது உடலைப் பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெகநாதனின் குடும்பத்தினருடன் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, புகழூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை
இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த கல்குவாரியை மூட வேண்டும் என்று போராடிய சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications