கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரச்சார அனுமதியில் பாகுபாடு.. தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு.. ஜோதிமணி, செந்தில் பாலாஜி போராட்டம்!

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட

Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி அதிக எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.

அதேசமயம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக திமுக சார்பாக, திமுகவில் புதிதாக இணைந்த கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து இவர் திமுகவில் இணைந்துள்ளதால் இந்த இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கத்தி முனையில் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்.. பெண் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு தலைதெறிக்க ஓட்டம்! கத்தி முனையில் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்.. பெண் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு தலைதெறிக்க ஓட்டம்!

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த நிலையில் திமுக கூட்டணிக்கு இறுதி பிரச்சாரம் செய்வதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது என்று இவர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். அதாவது கரூரில் இறுதி பிரச்சாரம் செய்ய போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

திமுக இல்லை

திமுக இல்லை

அதேபோல் திமுக கூட்டணி கேட்கும் இடங்களை கொடுப்பதில்லை, அதிமுக கூட்டணி கேட்கும் இடங்களை தேர்தல் ஆணையம் வழங்குகிறது என்றும் இவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரங்களை செய்வதில் கட்சிகள் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் திமுக கூட்டணிக்கு நேரம் ஒதுக்குவதில் பாகுபாடு காட்டுவதைக் கண்டித்து கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கேட்கின்ற இடத்தை அளிக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர். இவர்களின் போராட்டத்தை தொடர்ந்து போலீசார், இவர்களிடம் சமாதானம் பேசினார்கள். இந்த போராட்டம் காரணமாக, கரூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Senthil Bajalin and Jothimani protested against ECI rules in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X