For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம்

Google Oneindia Tamil News

கேரள பெண் கேரள அமலாக்கத்துறையில் அளித்திருந்த புகார் அடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். கேரளப்பெண் குற்றப்பின்னனி உடையவர், சாட்சி விசாரணைக்காக மட்டுமே என்னை அழைத்திருந்தனர், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சி.விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி கேரளப் பெண்ணின் பகீர் புகார்

சி.விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி கேரளப் பெண்ணின் பகீர் புகார்

ரூ.14 கோடி மோசடி செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் நெல்லை டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். சி. விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் நெல்லை டிஐஜியிடம் புகார் அளித்திருந்தார். பணமோசடி குறித்து கேரள அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், சென்னை டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாக தெர்வித்திருந்தார்.

திருமணவிழாவில் அறிமுகமான விஜயபாஸ்கர்

திருமணவிழாவில் அறிமுகமான விஜயபாஸ்கர்

"கடந்த 2013-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அறிமுகமான சி.விஜயபாஸ்கர் எங்களோடு இணைந்து தொழில் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். எங்களிடம் இருந்த ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை 2017 ஜனவரி முதல் வாரத்தில் 3 பகுதிகளாக பிரித்து சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் வைத்து அவர்களிடம் ஒப்படைத்தோம்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல்

பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல்

கடந்த 2018-ம் ஆண்டு வேறுதொழில் நிறுவனம் தொடங்குவதற்காக விஜயபாஸ்கரிடம் நகைகளைக் கேட்டபோது, பல்வேறுகாரணங்களைக் கூறி மறுத்துவந்தார். 2019 மார்ச் மாதத்தில் சென்னையில் தனியார் ஹோட்டலில் வைத்து ரூ.3 கோடியை மட்டும் அளித்துவிட்டு, மீதி பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவதாக விஜயபாஸ்கரும், அவரது நண்பர்களும் மிரட்டினர் என்று புகார் அளித்திருந்தார்

 ஆளுங்கட்சி என்பதால் புகார் அளிக்கவில்லை, கொச்சி அமலாக்கத்துறையில் புகார்

ஆளுங்கட்சி என்பதால் புகார் அளிக்கவில்லை, கொச்சி அமலாக்கத்துறையில் புகார்

தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் புகார் அளிக்கவில்லை தற்போது புகார் அளிக்கிறேன். சட்டத்துக்கு உட்பட்டு பரிகாரம் தேடிக் கொள்ள, கொச்சி அமலாக்கப்பிரிவில் புகார் அளித்துள்ளேன். திருநெல்வேலியில் புகார் அளித்துள்ளேன். சென்னையில் காவல்துறை இயக்குநர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவும், நீதிமன்றம் செல்லவும் உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை சம்மன் ஆஜரான விஜயபாஸ்கர்

அமலாக்கத்துறை சம்மன் ஆஜரான விஜயபாஸ்கர்

இந்நிலையில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் இம்மோசடி புகார் குறித்து விசாரிக்க சி.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று சி.விஜயபாஸ்கள் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சாட்சியாக ஆஜராக சம்மன்

சாட்சியாக ஆஜராக சம்மன்

இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்டது குறித்தும் ஆஜரானது குறித்தும் விளக்கம் அளித்துள்ள விஜய பாஸ்கர் தான் சாட்சி விசாரணைக்காக மட்டுமே அமலாக்கத்துறையால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், பல குற்றப்பின்னனி உடைய ஷர்மிளா குறித்து விசாரிக்க அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை (WITNESS SUMMON) வந்ததால் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தேன் எனத்தெரிவித்துள்ளார்.

மோசடிப்பெண் ஷர்மிளா சும்மா விடமாட்டேன்

மோசடிப்பெண் ஷர்மிளா சும்மா விடமாட்டேன்

நெல்லையில் ஷர்மிளா என்னைப்பற்றி உண்மைக்கு மாறாக அவதூறு தெரிவித்து பொய்யான புகார் அளித்துள்ளார். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர என்னுடைய வழக்கறிஞர் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன் என விஜய்பாஸ்கர் கேரளாவில் பேட்டி அளித்து செய்திக்குறிப்பிலும் தெரிவித்துள்ளார்.

English summary
Kerala woman with fraudulent background: I will take legal action: Vijayabaskar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X