கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி! வீரப்பன் மகள் 4வது இடம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இடையே பலப் பரீட்சை நடக்கும் நிலையில், வெற்றி வாகை சூடியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத். காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,92,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வித்யாராணி வீரப்பன் 4வது இடம் பெற்றுள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மக்களவைத் தொகுதி கிருஷ்ணகிரி. எல்லையோர தொகுதி என்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பேசும் மக்கள் இணைந்து வாழ்கின்றனர். பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்ட தொகுதி. வெளி மாவட்ட வாக்காளர்களும் கணிசமாக இருக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,92,883 வாக்குகளும், அதிமுகவின் ஜெயப்பிரகாஷ் 3,00,338 வாக்குகளும், பாஜகவின் நரசிம்மன் 2,14,152 வாக்குகளும், நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 1,07,003 வாக்குகளும் பெற்றுள்ளனர். 1,92,545 வாக்குகள் வித்தியாசம்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வாக்காளர்கள்: 16,23,179
ஆண் வாக்காளர்கள் - 8,07,389
பெண் வாக்காளர்கள்- 8,02,219
மூன்றாம் பாலினத்தவர்- 305
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் - 11,60,498
பதிவான வாக்கு சதவீதம் - 71.50 %
போட்டியில் வேட்பாளர்கள்: கிருஷ்ணகிரி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், ஓசூர் எம்.எல்.ஏ.வாக 3 முறை பணியாற்றியவர். அவரையே இந்த முறை சிட்டிங் எம்.பி செல்லக்குமாருக்கு பதிலாக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அதிமுக சார்பில் ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர் பாமகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்.
பாஜக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் நரசிம்மன் கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் எம்.பி. தமாகா எம்.பியாக இருந்த நரசிம்மன், பாஜக வேட்பாளராக நிற்கிறார். இவர்களுடன் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு இயல்பாகவே செல்வாக்கு மிக்க தொகுதியான கிருஷ்ணகிரியில் திமுக ஆதரவு வாக்குகளோடு நம்பிக்கையுடன் இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத். அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், பாஜக வேட்பாளர் நரசிம்மன், நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் ஆகியோர் கிருஷ்ணகிரியை கைப்பற்றும் தீவிரத்துடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: ஒசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி. 2021 சட்டசபை தேர்தலில் ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும், ஓசூர், பர்கூரில் திமுகவும், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி 1980, 1984, 1989, 1991 என பல தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக கிருஷ்ணகிரி உள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் 8 முறை, திமுக 5 முறை, அதிமுக 3, தமாகா 1 முறை வென்றிருக்கிறது. கடைசி 2 முறைகளில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
2019 கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
செல்லக்குமார் (காங்கிரஸ்) - 6,11,298
கேபி முனுசாமி (அதிமுக) - 4,54,533
மதுசூதனன் (நாதக) - 28,000
ஸ்ரீ காருண்யா சுப்ரமணியம் (மநீம) - 16,995
வெற்றி வித்தியாசம் - 1,56,765
2014 கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
அசோக் குமார் (அதிமுக) - 4,80,491
சின்ன பில்லப்பா (திமுக) - 2,73,900
ஜிகே மணி (பாமக) - 2,24,963
செல்லக்குமார் (காங்கிரஸ்) - 38,885
வெற்றி வித்தியாசம் - 2,06,591
2009 கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
இ.ஜி. சுகவனம் (திமுக) - 3,35,977
நஞ்சே கவுடு (அதிமுக) - 2,59,379
அன்பரசன் (தேமுதிக) - 97,546
பாலகிருஷ்ணன் (பாஜக) - 20,486
வெற்றி வித்தியாசம் - 76,598
2004 கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
இ.ஜி. சுகவனம் (திமுக) - 4,03,297
நஞ்சே கவுடு (அதிமுக) - 2,84,075
வெற்றி வித்தியாசம் - 1,19,222
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications