வீட்டுக்கு ஒன்னு..வேலையில் ஒன்னு! இரட்டை வால் குருவி வேடியம்மாள்! வாட்ஸ் அப்பில் கணவன் செய்த சம்பவம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திருமணமான பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றொரு கிராம நிர்வாக அலுவலருடன் தாலி கட்டி குடும்பம் நடத்திய புகைப்படங்களை அவரது கணவரை வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் தாண்டிய உறவுகளால் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நாள்தோறும் செய்திகளில் இது போன்ற கள்ளக்காதல் விவகாரங்களால் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கணவனுக்கு மனைவியையோ அல்லது மனைவிக்கு கணவனையோ பிடிக்கவில்லை என்றால் மனமொத்து இருவரும் பிரிந்து தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம். இதனால் எந்த பிரச்சனையும் வருங்காலத்தில் வரப்போவதில்லை.

முறையற்ற உறவு
ஆனால் ஒருவருக்கொருவர் தெரியாமல் முறையற்ற உறவுகளில் ஈடுபடும் போது அது மிகப் பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும். இது குடும்பங்கள் சார்ந்த பிரச்சனையாக மட்டும் இது இருக்காது குழந்தைகளின் எதிர்காலம் கல்வி போன்றவை பாதிக்கப்படுவதோடு சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் தான் பணிபுரிந்த இடத்தில் மற்றொரு உடன் முறையற்ற உறவு கொண்டிருந்ததோடு அதனை புகைப்படமாகவும் எடுத்து அவ்வப்போது பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

கிராம நிர்வாக அலுவலர்
அதனை அவரது கணவர் தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி கிராமம் பெண்டரஹள்ளி-I தரப்பு கிராம நிர்வாக அலுவலராக பணிசெய்து வருபவர் வேடியம்மாள் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே போச்சம்பள்ளி தாலுகா மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணிசெய்து வரும் சென்னகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

புகைபடங்கள்
பின்னாளில் அது கள்ளக் காதலாக பூத்துள்ளது. பின்னர் ஜோடிகள் இருவருக்கும் திருமணம் ஆனதை மறந்து காதலின் ஒருபடி மேலே சென்று மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் செய்வது கள்ள காதல் என்பதை மறந்து கள்ள திருமணம் செய்துகொண்டு அதனை நினைவு சின்னமாக பத்திரப்படுத்த இருவரும் ஒன்றாக சேர்ந்து இன்ப சுற்றுலா சுற்றியதை புகைப்படமாக எடுத்து தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக பதிவு செய்து அந்த புகைப்படங்களை ரசித்து வந்துள்ளனர்.

கணவன் அதிர்ச்சி
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த சக்திவேல் அவரது மனைவி வேடியம்மாளின் செல்போனை சோதனை செய்த போது அதில் கிராம நிர்வாக அலுவலர் சென்னகிருஷ்ணன் உடன் திருமணம் செய்துகொண்டு கழுத்தில் இரண்டாவதாக மஞ்சள் கயிற்றில் தாலியுடன் செல்பி புகைப்படம் மற்றும் அவருடன் பல இடங்களில் சுற்றி திறந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து மனைவி வேடியம்மாளிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

வாட்ஸ் அப்
பின்னர் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அவரது மனைவி வேடியம்மாள் செல்போனில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் செல்போன் வாட்ஸ் அப் குழுக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரும் இருக்கும் 21 புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து வேகமாக பரவிவரும் விவகாரம் வருவாய்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications