கிருஷ்ணகிரியில் பட்டா மாறுதலுக்கு 1,000 லஞ்சம்.. விஏஓவுக்கு 11 வருடம் கழித்து இடி.. 4 வருடம் ஜெயில்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: பட்டா மாறுதலுக்கு ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலரின் வேலை பறிபோகிறது. அதேபோல அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1000 ரூபாய் லஞ்சப்பணம் அவரை 11 வருடங்கள் கழித்து, 4 வருடம் சிறையில் தள்ளியிருக்கிறது. இது போல் பல அரசு ஊழியர்கள் பல வருடம் கழித்து தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால் அவர்கள் எத்தனை வருடங்கள் தள்ளிப்போனாலும் தண்டிக்கப்படுவது உறுதியாகும். அதுவும் கையும் களவுமாக மாட்டும் அதிகாரிகள் ரசாயண பவுடருடன் கூடிய ரூபாய் நோட்டுகளை தொடுவதால் தடய அறிவியல் சோதனையில் சிக்கிவிடுவார்கள். சாட்சிகள், சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு எதிராகவே இருக்கும் என்பதால் என்னதான் லஞ்சம் வாங்கியவரிடம் சமாதானமாக போனாலும், வழக்கு சிக்கலாகவே முடியும்.

VAO Krishnagiri sentenced to 4 years in prison for accepting a 1 000 bribe for a patta transfer

தற்போதைய சூழலில் அரசு ஊழியர்கள், அரசு நீதிமன்றத்தில் வழக்கை நடத்த அனுமதி தருவதில் தாமதம் செய்வது தான் ஒரே சிறிய நிவாரணமாக இருந்து வந்தது. ஆனால் அதற்கும் உயர்நீதிமன்றம் அண்மையில் கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ளது. எனவே அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது . அப்படி வாங்கி சிக்கி கொண்டால் தப்பிப்பது இனி மிக கடினம் ஆகும். கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நொச்சிப்பள்ளியை சேர்ந்த 47 வயதாகும் ரஜினி என்பவர் அஞ்செட்டி தாலுகா மாடக்கலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள துப்புகானப்பள்ளியில் பணியாற்றியிருக்கிறார் . அப்போது சின்னபேட்டகானப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தாச்சாரி என்பவரிடம் பட்டா மாறுதல் செய்ய ரூ.1,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தாச்சாரி, இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தாச்சாரி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார், ரஜினியை கையும், களவுமாக கைது செய்தனர்.

இவ்வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி லதா, குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ரஜினிக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை, வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலைஞானம் ஆஜரானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+