கேஜிஎப்பே தோத்துடும்! 200 ஆண்டு பழைய சுரங்கம்.. உள்ளே போய் பார்த்தால்! மலைத்து போன ஆராய்ச்சியாளர்கள்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் 200 ஆண்டுகள் பழமையான சுரங்கத்தில் சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் உள்ளே இருந்த பொருட்களை பார்த்து வியந்து போய் உள்ளனர்.
உலகம் முழுவதும் நம் முன்னோர்களின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தொல்லியல் துறை நிபுணர்கள் இத்தகைய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு பல வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைவிடப்பட்ட உலோக சுரங்கம் ஒன்றில் இருந்து பல வியப்பூட்டும் பொருட்களும், ஓவியங்களும் கிடைத்துள்ளன.

புதிரான வரைபடங்கள்
இங்கிலாந்தின் வடகிழக்கு நகரமான ஷெசயர் அருகே அமைந்துள்ள ஆல்டெர்லி எட்ஜ் என்ற இடத்தில்தான் இந்த சுரங்கம் உள்ளது. 1810-ம் ஆண்டுகளுக்குப் பிறகு இது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சுரங்கத்திற்குள் பணியாளர்களின் காலணிகள், களிமண்களால் செய்யப்பட்ட குழாய்கள், உலோகத்தால் செய்யப்பட்ட பட்டன்கள், கனமான பொருட்களை நகர்த்த உதவும் எந்திரங்களின் சிதறிய பாகங்கள் ஆகியவையும் காணக்கிடைக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக புதிரான வரைபடங்கள், WS என்ற எழுத்துக்கள் மற்றும் 20 ஆகஸ்ட் 1810 என்ற தேதியுடன் எழுதப்பட்டுள்ளது வியப்பில் ஆழ்த்துகிறது.

களிமண்ணால் ஆன மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்
மிகவும் பழமையாக தூசுபடிந்து இத்தகைய எழுத்துக்கள் காணப்பட்டன. மேலும் அங்குள்ள பாறைகளில் ஸ்டைலாக எழுதப்பட்ட எழுத்துக்களும் உள்ளன. சுவரில் புதைந்த நிலையில், இருந்த களிமண் கிண்ணமும் கண்டெடுக்கப்பட்டது. மூட நம்பிக்கையாக இவ்வாறு புதைக்கப்பட்டு இருந்து இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
மெழுகுவர்த்தி வைக்க பயன்படுத்தப்படும் களிமண்ணால் ஆன ஸ்டாண்டில் கைரேகை பதிவுகளும் கிடைத்துள்ளன. சுவரில் சாய்ந்த தொழிலாளர்களின் ஆடை படிமங்களும் கிடைத்துள்ளன.

இணையத்தில் வெளியீடு
கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் இந்த சுரங்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் குறுகிய பாதைகள், மிகவும் சிக்கலான அமைப்புகளை கொண்டிருந்ததால் இதற்குள் சென்று ஆய்வு செய்வதில் சிரமம் இருந்தது.
இதையடுத்து, தற்போது நிபுணர்கள் பலர் உதவியுடன் உலோக சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர். இதை அனைவரும் பார்க்கும் வகையில் தற்போது இது இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

கிளப் தலைவர் பதில்
இது குறித்து இந்த சுரங்கத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட கிளப்பின் தலைவர் எட் கோகொலான் கூறுகையில், "பழமை மாறாமல் அசல் நிலையில் இதுபோன்ற சுரங்கங்கள் காணக்கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று. அதுவும் இதில் தொழிலாளர்களின் உடைமைகளும் கிடைத்துள்ளது அரிதிலும் அரிதாக உள்ளது.
ஏதோ ஒரு கட்டாய சூழல் காரணமாக சுரங்க பணிகளை தொழிலாளர்கள் கைவிட்டிருக்கலாம் என்று இங்கு கிடைத்துள்ள பொருட்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், அதில் இடம் பெற்றிருக்கும் குறிப்பிட்ட தேதி மூலம் சொல்ல வரும் தகவல் என்ன? எழுதியது யார்? என்பதை கண்டறியவும் ஆவலாக உள்ளோம்" என்றார்.

டைம் கேப்சூல் போன்று
இதேபோல் இங்கிலாந்தின் தேசிய தொல்லியல் ஆய்வாளர் கூறுகையில், 'சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை புகைப்படமாக எடுத்துள்ளோம். எத்தனை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதை பட்டியலிட்ட பின்னர் அந்த பொருட்களை அங்கேயே கிடந்த இடத்தில் அப்படியே விட்டுவிட்டோம். பூமிக்கடியில் உள்ள சூழல் அங்குள்ள பொருட்களை அப்படியே பாதுகாக்கும் என்பதால் அதை செய்தோம்.
பழங்கால அரிய ஆவணங்களை பாதுகாத்து வைக்கும் 'டைம் கேப்சூல்' போன்று சுரங்கம் உள்ளது. இதன் மதிப்பு எல்லாம் பல கோடி வரும் என்கிறார்கள். வரும் தலைமுறையினரும் இதை அறிந்து கொண்டு ஆய்வு செய்ய இந்த இடம் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications