லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம் பற்றி இந்திய அரசிடம் குரல் எழுப்ப வேண்டும்.. 36 பிரிட்டன் எம்.பி.க்கள் கடிதம்

Google Oneindia Tamil News

லண்டன்: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்புக்கு, இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஞ்சாப் தொடர்புகளைக் கொண்ட, பல தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பிக்கள் இதில் அடங்குவர்.

36 British MPs back farmers’ protest

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தன்மஞ்சீத் சிங் தேசியின் ஒருங்கிணைப்பில், இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்பை சந்திக்க நேரம் ஒதுக்க எம்.பி.க்கள் கோரியுள்ளனர். இந்தியாவிடம் இந்த பிரச்சினை பற்றி டொமினிக் பேச கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மி கோர்பின், வீரேந்திர சர்மா, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ், நாடியா விட்டோம், பீட்டர் பாட்டம்லி, ஜான் மெக்டோனல், மார்ட்டின் டோச்செர்டி-ஹியூஸ் மற்றும் அலிசன் தெவ்லிஸ் ஆகியோர் உட்பட இந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் மற்றும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது.. நம்புங்கள்.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தோமர்விவசாயிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது.. நம்புங்கள்.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தோமர்

இந்த கடிதத்தில், "இது இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாபுடன் தொடர்புள்ளவர்களுக்கும் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசு கொண்டுவந்துள்ள 3 விவசாய சட்டங்கள்தான் இதற்கு காரணம். மற்ற இந்திய மாநிலங்களிலும் இந்த சட்டம், பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல பிரிட்டிஷ் சீக்கியர்களும், பஞ்சாபியர்களும், தங்கள் எம்.பி.க்களிடம், இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். ஏனெனில் அவர்கள் பஞ்சாபில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பரம்பரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்

பிரிட்டனில் கணிசமான அளவுக்கு பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அழுத்தம் காரணமாக 36 எம்பிக்கள், இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 2 முறை குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
36 British MPs from various parties have written to British Foreign Secretary Dominic Raab, asking him to raise the issue of farmers’ agitation with the Narendra Modi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X