ஏம்மா கீரை எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா? கருவிலேயே சிசு தந்த செம ரியாக்சன்.. வாவ்.. பாருங்களேன்!
லண்டன்: தாயின் கருப்பையில் இருக்கும் சிசுக்கள் எந்த உணவை விரும்புகின்றன; எந்த உணவை வெறுக்கின்றன என்பதை தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதில் விரும்பிய உணவை தாய் உண்ணும் போது, சிசுக்கள் சிரித்த முகத்துடனும், பிடிக்காத உணவை உண்ணும் போது சிசுக்கள் தங்கள் முகத்தை அஷ்டக்கோணலாகவும் மாற்றுவதை மருத்துவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் கருவில் இருக்கும் சிசுக்களுக்கு கூட உணவு மீதான விருப்பு, வெறுப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்த தெரிகிறது என்பது உறுதியாகி உள்ளது.

காய்கறியா ச்சீ ச்சீ..
பொதுவாக, வீட்டில் இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பதை பார்த்திருப்போம். அதிலும், சாக்லேட், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் விரும்பி உண்ணுவதையும், காய்கறி, கீரை போன்ற உணவுகளை கண்டாலே தலைதெறிக்க ஓடுவதையும் பெரும்பாலான குழந்தைகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதே பழக்கம் அவர்கள் வளரும் போதும் அவர்களுடன் ஒட்டிக்கொள்ளும். வளர்ந்த பெரிய பிள்ளைகள் இருக்கும் வீட்டில் கூட, "இவனுக்கு குழந்தையில் இருந்தே முட்டை கோஸ் பிடிக்காது, பீன்ஸ் பிடிக்காது" என பல அம்மாக்கள் கூறுவதை கேட்டிருப்போம்.

ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகள்
இவ்வாறு நாம் எளிதில் கடந்து செல்லக் கூடிய இந்த விஷயத்தை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர். அது ஏன் சில உணவுகளை மட்டும் குழந்தைகளுக்கு பிடிக்கின்றன? எப்படி இந்த உணர்வு அவர்களுக்கு உருவானது? என்பது குறித்து பிரிட்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

கேரட் சாப்பிட்ட கர்ப்பிணிகள்
இதற்காக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்கள் 100 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இவர்களை 35, 35, 30 என மூன்று குழுக்களாக விஞ்ஞானிகள் பிரித்துக் கொண்டனர். இவர்களில் முதல் குழுவைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு கேரட், பீட்ரூட் ஜூஸ்கள், சப்போட்டா உள்ளிட்ட இனிப்பு சுவை மிகுதியான பழங்கள் சாப்பிட கொடுக்கப்பட்டன.

கீரைகள் - டீ நறுமணம்
அதேபோல, இரண்டாவது குழுவைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு பச்சை காய்கறிகள், ப்ரக்கோலி, வெங்காயம், கீரை வகைகள் ஆகியவை வழங்கப்பட்டன. மூன்றாவது குழுவைச் சேர்ந்தவர்கள் தேனீர், காபி போன்றவற்றின் நறுமணங்கள் அடங்கிய அறையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நறுமணங்கள் ஒரு சில நிமிடங்களில் மாறி மாறி வரும் வகையில் 'செட்டிங்க்ஸ்' செய்யப்பட்டன.

என்ன ஒரு சிரிப்பு..
பின்னர் 20 நிமிடங்கள் கழித்து இந்தப் பெண்களின் வயிற்றில் உள்ள சிசுக்களை 4D ஸ்கேன்களை கொண்டு விஞ்ஞானிகள் பார்த்தனர். அப்போது கேரட், பீட்ரூட், சப்போட்டா போன்ற இனிப்புச் சுவை மிகுந்த பழங்களை சாப்பிட்ட பெண்களின் சிசுக்கள் நன்றாக சிரித்துக் கொண்டும், ஜாலியாக அங்கும் இங்கும் அசைந்து கொண்டும் இருக்கின்றன. அந்த சிசுக்களின் முகத்தில் குறைந்தது அரை மணிநேரமாவது சிரிப்பு இருக்கிறது.

செம்ம கடுப்பு..
அதே சமயத்தில், கீரை, காய்கறிகள் கொடுக்கப்பட்ட பெண்களின் சிசுக்கள் தங்கள் முகத்தை அஷ்டக்கோணலாக வைத்திருந்தன. அதை பார்க்கும் போது சிசுக்கள் கோபமாகவும், வெறுப்பாகவும் இருப்பது நன்றாக தெரிகிறது. மேலும், பெரிய அளவில் அசைவும் இல்லாமல் கடமைக்கு உடலை நெளித்துக் கொண்டு இருந்தன. இந்த வெறுப்புணர்ச்சி பல மணிநேரங்களுக்கு இந்த சிசுக்களிடம் காணப்பட்டது. குறைந்தது 2 மணிநேரங்களுக்கு பிறகுதான் இந்தக் குழந்தைகள் அந்த வெறுப்புணர்வில் இருந்து வெளியே வருகின்றன.

ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்
அதேபோல, டீ, காஃபி நறுமணங்களை முகர்ந்த பெண்களின் சிசுக்கள் மிக உற்சாகமாகவும், சிரித்துக் கொண்டும் கருப்பையில் உருண்டு விளையாடுகின்றன.
இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். இன்னும் வெளியுலகுக்கே வராத குழந்தைகளுக்கும் உணவு மீதான விருப்பு, வெறுப்பு இருப்பதை கண்டு விஞ்ஞானிகள் பூரித்து போயினர்.
இந்த ஆராய்ச்சியை அப்பெண்களுக்கு மாற்றி மாற்றி ஒரு வாரக்காலத்துக்கு மருத்துவர்கள் செய்து பார்த்தனர். அதிலும் இதே முடிவுகளை தான் மருத்துவர்கள் கண்டனர். இதையடுத்து, நேற்று இந்த ஆராய்ச்சிக் கட்டுரை 'சேஹ்' (sage) என்ற மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்டது.
மேலும், வயிற்றில் இருக்கும் சிசுக்கள் தங்கள் உணர்ச்சிகளை காட்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் மருத்துவர்கள் வெளியிட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications