கொரோனா வேக்சின் 2 டோஸ் போதாதது.. 3ஆம் டோஸை போட்டால் மட்டும் சமாளிக்கலாம்.. பிரிட்டன் முக்கிய முடிவு
லண்டன்: வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்பதால் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 3ஆவது கொரோனா தடுப்பூசி டோஸை அளிக்கப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. அங்கு 50 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இதனால் வேக்சின் போடும் பணிகளையும் பிரிட்டன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே வேக்சின் பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது.

பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா மெல்லக் குறையத் தொடங்கிய போது உருமாறிய ஆல்பா கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடுமையாகக் கட்டுப்பாடுகள் காரணமாக சில மாதங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு குறைந்திருந்த சூழலில் மீண்டும் டெல்டா கொரோனாவால் வைரஸ் பரவல் உயரத் தொடங்கியுள்ளது.

வேக்சின் பணிகள்
பிரிட்டன் நாட்டில் இதுவரை 85% பேருக்கு வேக்சின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தது 60% பேருக்குத் தடுப்பூசியின் 2 டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு பிரிட்டனில் அதிகரிக்கக் கூடும் என்று அந்நாட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். இதைத் தடுக்கும் திடங்கள் குறித்தும் அந்நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது
Recommended Video

பூஸ்டர் டோஸ்
இந்நிலையில், வைரஸ் தோற்றால் எளிதாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களுக்கு 3ஆவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க அந்நாட்டு வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் கூறுகையில், "இந்த வைரசுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் முதல் தடுப்பூசி திட்டம் இந்த நாட்டில் சுதந்திரத்தை மீட்டெடுத்தது. பூஸ்டர் திட்டம் இந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கும்" என்று அவர் கூறினார்.

யாருக்குத் தேவை
இருப்பினும், பூஸ்டர் டோஸ்ஸாக எந்தத் தடுப்பூசியை அளிக்கலாம் என்பது குறித்து அந்நாட்டு அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம் முதல் 3ஆம் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..16 வயதுக்கு மேல் உள்ளவர்களில் நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் பூஸ்டர் டோஸ் அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications