லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முஸ்லிம் பெண் என்பதால் அமைச்சர் பதவி தரவில்லை.. பிரிட்டன் எம்.பி குற்றச்சாட்டு!

By
Google Oneindia Tamil News

லண்டன்: முஸ்லிம் பெண் என்பதால், பிரிட்டன் அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக‌ பிரிட்டன் பெண் எம்.பி. நஸ்ரத் கனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியில் இருந்து 49 வயதான‌ நஸ்ரத் கனி 2015ல் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து 2018 ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நஸ்ரத் கனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவர். அதன்பிறகு பெற்றோருடன் பிரிட்டனில் குடியேறியவர். இந்நிலையில் 2020ல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அப்போது, நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

 நஸ்ரத் கனி

நஸ்ரத் கனி

இது குறித்து தற்போது நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சி பேட்டியில் போரிஸ் ஜான்ஸன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், '' 2020ல் பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது கட்சியின் பாராளுமன்ற கொறடா, எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண்

பெண்

முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, கட்சி எம்.பி.,க்களுக்கு அசவுகரியமாக உள்ளதே அதற்கு காரணம் என்றும் கட்சியின் கொறடா தெரிவித்தார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், என்னுடைய எதிர்கால அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என எச்சரித்தனர். அதனால் அப்போது மவுனமாக இருந்து விட்டேன். கட்சியின் மீதான எனது நம்பிக்கையை இழக்கவில்லை.

மறுப்பு

மறுப்பு

நான் எம்.பி.யாக நீடிக்கலாமா, வேண்டாமா என்று சில சமயங்களில் தீவிரமாக யோசித்தேன்'' என்று நஸ்ரத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நஸ்ரத் கனியின் குற்றச்சாட்டை பழமைவாத கட்சியின் பாராளுமன்ற கொறடா மார்க் ஸ்பென்சர் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவை அவதூறானவை என்று நான் கருதுகிறேன். அந்த வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 போரிஸ் ஜான்ஸன்

போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் எம்.பி.யின் இந்த குற்றச்சாட்டிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகம் உடனடியாக பதில் அளிக்கவில்லை. நஸ்ரத் கனி இப்படி கூறியிருப்பது, பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என அக்கட்சியிலேயே சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், பிரிட்டன் எதிர்கட்சித் தலைவர் கேர், நஸ்ரத் கனியின் குற்றச்சாட்டு குறித்து போரிஸ் தலைமையிலான கட்சி விசாரிக்க வேண்டும் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
The opportunity to become a minister again in the British cabinet was blocked by saying that she is a Muslim Britain's female MP Nusrat Ghani said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X