10 நாட்களுக்கு பின் ராணி எலிசபெத் இறுதிசடங்கு.. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி!
லண்டன்: ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது என்று பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நீண்டகால ராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.
1952ல் அரியணைக்கு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உயிரிழந்துள்ள நிலையில், இறுதிசடங்கு குறித்த திட்டங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன.

ராணி எலிசபெத்
இதனை பிரிட்டன் அதிகாரிகள் ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிட்டு வருகின்றனர். ராணி எலிசபெத் உயிரிழப்பு காரணமாக, பிரிட்டனில் அடுத்து வரும் நாட்களில் துக்கம் அனுசரிக்கப்படும். முதலில் பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் ராணி எலிசபெத்திற்கு சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

5 நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி
இதனைத்தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்ஃபோர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்படும். மூன்றாவது நாளிற்கு பின் ராணியின் உடல் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் 5 நாட்கள் வைக்கப்பட உள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் மக்கள் அஞ்சலி செலுத்த 23 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தலைவர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிசடங்கு
இதனைத்தொடர்ந்து ராணி எலிசபெத்திற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டும் எனவும், 10ம் நாளில் இறுதி சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கின் போது, ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

அடக்கம்
இதன்பின்னர் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இளவரசர் பிலிப் அருகே ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications