லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம்.. அதிரடியாக சொன்ன தீர்ப்பாயம்!

பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும்.

Google Oneindia Tamil News

லண்டன்: ஆண்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால் உருவக்கேலி செய்வார்கள். குண்டாக இருந்தால் குண்டன் என்றும் தலைமுடி இல்லாதவர்களாக இருந்தால் வழுக்கைத்தலையர் என்றும் சினிமாவில் கேலி செய்வார்கள். அவ்வாறு ஆண்களின் வழுக்கை தலை குறித்து கேலி செய்வது பாலியல் குற்றம் என பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும் என்றும் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் தலையாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.

ஆண் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும்.. நடிகை ஓவியா அறிவுரை! ஆண் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும்.. நடிகை ஓவியா அறிவுரை!

வழுக்கைத்தலையர்

வழுக்கைத்தலையர்

வடகிழக்கு இங்கிலாந்தின் Yorkshire யார்க் சைர் நகரில் உள்ள தனியாா் நிறுவனமொன்றிலிருந்து கடந்த ஆண்டு எலக்ட்ரீசன் பணியில் இருந்து டோனி ஃபின் என்ற ஊழியர் நீக்கம் செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தில் அவர் 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நிறுவன உயரதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கப்பட்டதாகவும் தொழிலாளர் தீர்ப்பாயத்திடம் முறையிட்டிருந்தார்.

பாலியல் குற்றம்

பாலியல் குற்றம்

இந்த வழக்கை 3 பேர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இந்த அவமதிப்பு என்பது உரிமைகோருவோரின் கண்ணியத்துக்கு எதிரானது என கூறியதோடு, பணியிடத்தில் பெண்களின் உறுப்புகளை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடங்கும் என தெரிவித்தனர்.

அந்த வார்த்தையை பயன்படுத்தினால் குற்றம்

அந்த வார்த்தையை பயன்படுத்தினால் குற்றம்

தீர்ப்பாயத்தின் மூன்று உறுப்பினர்கள், முடி உதிர்தல் குறித்த தங்கள் சொந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு, பெண்களை விட ஆண்களுக்கு வழுக்கை அதிகமாக இருப்பதாகக் கூறினர். எனவே, வழுக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பாலினத்தின் பாதுகாக்கப்பட்ட பண்பு தொடர்பான அவமதிப்பாகும்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இழப்பீடு வழங்க உத்தரவு

இதனையடுத்து 1995ம் ஆண்டு வழக்கை குறிப்பிட்டு ஆணை வழுக்கை என குறிப்பிடுவது பெண்ணின் மார்பகம் குறித்து விமர்சிப்பது போன்றது என கூறியது. எனவே, டோனி ஃபின்னுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனா்.

உருவக்கேலி வேண்டாமே

உருவக்கேலி வேண்டாமே

பெண்களின் உடலை குறித்து உருவக்கேலி செய்வது போல ஆண்களின் உடல் தோற்றத்தை குறித்து உருவக்கேலி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் உருவக்கேலி செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல நம் நாட்டிலும் உருவக்கேலி செய்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கூடுமானவரை யாரையும் உருவக்கேலி செய்து மனதை நோகடிக்காமல் இருப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
A British labor tribunal has ruled that mocking men's bald heads is a sexual offense. Judges have ruled that mocking female genital mutilation in the workplace is a sexual offense as well as mocking men's baldness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X