கோவிஷீல்டு தடுப்பூசியை நல்லா "கேப் விட்டு" போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது- ஆய்வு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: அஸ்ட்ராஜெனெகா (கோவிஷீல்ட்) தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களை நல்ல நேரம் எடுத்து, தாமதமாக செலுத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil

    அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையில் 45 வாரங்கள் வரை இடைவெளி விடுவது நல்லது. அப்படி செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையாது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு, மூன்றாவது மருந்தைக் கொடுப்பது ஆன்டிபாடிகளில் "கணிசமான அதிகரிப்புக்கு" வழிவகுக்கிறது. நோயெதிர்ப்பு சக்திக்கு "வலுவான ஊக்கத்தை" தூண்டுகிறது, என்று முதல்கட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

     தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி பற்றாக்குறை

    இருப்பினும் இந்த ஆய்வு முடிவை இதழில் வெளியிடும் முன்பாக மீண்டும், சக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமாம். அதன்பிறகுதான் இந்த ஆய்வுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும். "தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு இது ஆறுதல் செய்தியாகும். தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகள் மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த ஆய்வு உறுதி செய்யப்பட்டால், தாமதமும் நல்லதுதான் என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்" என்று ஆக்ஸ்போர்டு முன்னணி ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறினார்.

    10 மாத தாமதம்

    10 மாத தாமதம்

    "முதல் டோஸ் செலுத்தி 10 மாத தாமதத்திற்குப் பிறகு, இரண்டாவது டோஸ் செலுத்தினாலும் நல்ல ஆற்றல் உள்ளது." என்கிறார் அவர். நல்ல தடுப்பூசி திட்டங்களைக் கொண்ட வளர்ந்த நாடுகள் நோய் எதிர்ப்பு சக்தியை நீடிக்க மூன்றாவது பூஸ்டர் ஷாட்கள் தேவையா என்று ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் இப்படி இரு டோஸ்கள் இடையே காலக்கெடுவை அதிகரித்தால், நோய் எதிர்ப்பு சக்தி மேலும் கூடும் என்பதால், 3வது டோஸ் அத்தியாவசியப்படாது என்று கூறப்படுகிறது. அல்லது 3வது டோஸை தாமதமாக போட்டுக் கொள்ளலாம்.

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

    160 நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிதான் செலுத்தப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இது ஒரு மைல்கல்லாகப் பாராட்டப்பட்டது. ஏனெனில் ஒப்பீட்டளவில் குறைந்த செலவு மற்றும் போக்குவரத்து எளிதான தடுப்பூசி இதுதான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+