லாட்டரியை வெல்வது இப்படிதான்.. "27 டிக்கெட் போதும்..!" மெகா மர்மத்தை போட்டு உடைத்த கணிதவியலாளர்கள்
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரு கணிதவியலாளர்கள் லாட்டரியில் வெல்ல எத்தனை டிக்கெட்கள் வாங்கினால் போதும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அதேநேரம் இது தொடர்பாகச் சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒரே இரவில், எந்தவொரு வேலையும் செய்யாமல் பணக்காரன் ஆனால் எப்படி இருக்கும். இது அனைவரும் ஆசைப்படும் ஒரு விஷயம் தான். ஆனால் பணம் என்பது அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

அதேநேரம் இந்த ஓவர் நைட்டில் பணக்காரர் ஆகலாம் என்ற ஆசையைத் தூண்டியே லாட்டரி பிஸ்னஸ் நடக்கிறது. தமிழ்நாட்டில் இவை தடை செய்யப்பட்டாலும் கூட பல்வேறு மாநிலங்களிலும் இது இருக்கிறது.
பிரிட்டன் கணிதவியலாளர்கள்: எப்படியாவது லாட்டரி நமக்குக் கிடைக்காதா என்பதே பொதுமக்கள் பலரின் ஏக்கமாக இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் இரண்டு பிரிட்டிஷ் கணிதவியலாளர்கள் லாட்டரி தொடர்பாக முக்கிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். பொதுவாக லாட்டரியில் யாருக்குப் பரிசு கிடைக்கும் என்பதே தெரியாது. அதுவே லாட்டரியின் தனித்துவம். ஆனால், இவர்கள் அதையே முறியடித்துவிட்டனர்.
பிரிட்டன் லாட்டரியை பொறுத்தவரை அங்கே மொத்தம் 4.5 கோடி கம்பினேஷன்கள் இருக்கும். ஆனால், நாம் பரிசு வாங்க நாம் வெறும் 27 டிக்கெட்டுகளை வாங்கினால் போதும் என்பதை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 27 லாட்டரி சீட்டுகளை வாங்குவதன் மூலம் கட்டாயம் நமக்கு ஒரு பரிசு கிடைக்குமாம். இது தொடர்பாக அவர்கள் தங்கள் ஆய்வு முடிவையும் ஆய்விதழில் வெளியிட்டு இருந்தனர்..
27 டிக்கெட்கள்: அவர்களின் இந்த கண்டுபிடிப்பு உலகெங்கும் டிரெண்டானது. இருப்பினும், 27 டிக்கெட்களை வாங்கிய அனைவராலும் வெல்ல முடிவதில்லையாம். உலகெங்கும் இதுபோல 27 லாட்டரி சீட்டுகளை வாங்கியவர்களுக்கு வெவ்வேறு முடிவுகளே கிடைத்துள்ளது. இதனால் பலரும் இணையத்தில் அந்த கணிதவியலாளர்களை வறுத்தெடுக்கத் தொடங்கினர். இதற்கிடையே இது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு இவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்.. எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. இது குறித்து அந்த கணிதவியலாளர்கள் கூறுகையில், "பிரிட்டன் நேஷனல் லாட்டரியில், வீரர்கள் 1 முதல் 59 வரையிலான ஆறு வெவ்வேறு எண்களைத் தேர்வு செய்வார்கள்,.. லாட்டரி டிராவின் போது, 1 முதல் 59 வரையிலான எண்ணிக்கை தேர்வு செய்யப்படும். அதில் 5 எண்களையும் வாங்கிய நபர்களுக்கு மெகா ஜாக்பாட் கிடைக்கும்.
பரிசு கிடைக்கும்: அதேநேரம் அதில் இரண்டு எண்களாவது உங்களுக்கு இருந்தால் குறைந்தபட்ச பரிசாவது கிடைக்கும். இதில் மொத்தம் 45,057,474 சாத்தியமான காம்பினேஷன்கள் இருந்தாலும் 27 டிக்கெட்டுகளை வாங்கினால் போதும் குறைந்தபட்ச பரிசையாவது வாங்க முடியும். அதேபோல நீங்கள் குறைந்தது 27 டிக்கெட்களை வாங்க வேண்டும்.. ஒன்று குறைவாக 26 வாங்கினாலும் உங்களால் குறைந்தபட்ச பரிசை கூட வெல்ல முடியாது" என்றார்.
குறைந்தபட்சம் எத்தனை லாட்டரி டிக்கெட்களை வாங்க வேண்டும் என்பதை finite geometry என்ற முறையைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தீவிர ஆய்வுக்குப் பின்னரே எத்தனை காம்பினேஷன்கள் வந்தாலும் குறைந்தது 27 டிக்கெட்களை பெற்று வெல்ல முடியும் என்பதை இவர்கள் உறுதி செய்துள்ளனர்.
விளக்கம்: உண்மை என்னவென்றால், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஸ்டீவர்ட் மற்றும் டேவிட் குஷிங் ஆகிய இரண்டு கணிதவியலாளர்கள் 27 லாட்டரி சீட்டுகளை வாங்கினால் ஜாக்பாட் வரும் எனக் கூறவில்லை. மாறாகக் குறைந்தபட்ச பரிசாவது கிடைக்கும் என்றே கூறியிருந்தனர். அதையே பலரும் தவறா புரிந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் சொன்னது பிரிட்டன் லாட்டரி முறைக்குத்தான். மற்ற நாடுகளின் லாட்டரியில் வேறு முறை பின்பற்றப்படும் என்பதால் அங்கே இவை ஓர்க் அவுட் ஆகாது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications