என்னாது.. லலித் மோடி - சுஷ்மிதா சென் பிரிஞ்சிட்டாங்களா.. இன்ஸ்டா டிபி எப்படி மாறிச்சி பார்த்தீங்களா?
லண்டன்: லலித் மோடி சுஷ்மிதா சென் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பேசப்பட்ட நிலையில், திடீரென அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரை கடந்த 2008- ஆம் ஆண்டு முதன் முதலாக நடத்தியவர் லலித் மோடி.
தொழிலதிபருமான இவர் மீது முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

லலித் மோடி
லண்டனில் வசித்து வரும் லலித் மோடிக்கும் பிரபல நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் பரவின. இதை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடியும் சுஷ்மிதா சென்னும் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று டேட்டிங் செய்ததோடு, ஜாலியாக புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

பதிலடி கொடுக்கும் வகையில்
இதை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். இணையத்தில் ஒரு தரப்பினர் இந்த ஜோடியை கடுமையாக டிரோல் செய்யவும் தொடங்கினர். எனினும், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மிதா சென்னும் தனது இன்ஸ்டகிராம் பதிவில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

விரைவில் திருமணம் நடைபெறும்
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி லலித் மோடி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், ''சுஷ்மிதா சென் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதோடு, சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். அவரை காதலிக்கிறேன். விரைவில் திருமணம் நடைபெறும்'' என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார். அதன்பிறகு அடிக்கடி இருவரும் ஒன்றாக சுற்றிவந்தனர்.

பிரேக் அப் ஆனதாக
கடந்த சில வாரங்களாக லலித் மோடி - சுஷ்மிதா சென் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழாமல் இருந்த நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரேக் அப் ஆனதாக இணையத்தில் செய்திகள் கொடி கட்டி பறந்தன. இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் லலித் மோடி நடவடிக்கைகள் அமைந்துள்ளன. லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் புரொபைல் பிக்ஷராக சுஷ்மிதா சென்னுடன் இருந்த படத்தை வைத்திருந்த நிலையில், தற்போது அதை மாற்றி தன்னுடைய புகைப்படத்தை மட்டும் புரொபைல் பிக்ஷராக வைத்துள்ளார்.

விளக்கம் கொடுக்கவில்லை
அதேபோல் பயோவில் , சுஷ்மிதா சென் பெயரை நீக்கியுள்ளது பல்வேறு வகையில் வதந்திகள் பரவ காரணமாக அமைந்துள்ளது. சுஷ்மிதா சென்னும் லலித் மோடியும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தாலும் இதுவரை லலித் மோடி தரப்பிலோ சுஷ்மிதா சென் தரப்பிலோ எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications