லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனைவி பிறந்தநாளில் சோகம்... சுறாக்களிடம் சிக்கி கணவர் பலி.. உடலை மீட்க உதவிய திருமண மோதிரம்

Google Oneindia Tamil News

லண்டன்: மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரீயூனியன் தீவுகளில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எடின்பர்க்கை சேர்ந்த ஒரு நபரை அங்கிருந்த 4 சுறாக்கள், சூழ்ந்துக் கொண்டு அவரை உணவாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த 13 அடி நீள சுறா ஒன்றின் வயிற்றில் இருந்த அந்த நபரின் முழங்கை மற்றும் விரல்களில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை கொண்டு அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்ற சுறாக்களின் வயிற்றில் அவரது உடலின் பாகங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் இதுகுறித்து சோதனை மேற்கொள்ளவும் டி.என்.ஏ சோதனைக்கு அவரது உடலின் பாகங்களை உட்படுத்தவும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

 வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்ட விசிட்டிங் கார்டு.. புனேவில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்! வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்ட விசிட்டிங் கார்டு.. புனேவில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்!

தீவுகளில் கொண்டாட்டம்

தீவுகளில் கொண்டாட்டம்

எடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர், தன்னுடைய மனைவியின் பிறந்ததினத்தை உயர்ரக ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து, அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

துவம்சம் செய்த சுறாக்கள்

துவம்சம் செய்த சுறாக்கள்

இந்நிலையில் ரிச்சர்ட்டை அந்த கடலின் 4 சுறாக்கள் ஒரேநேரத்தில் சூழ்ந்து அவரை உணவாக்கிக் கொண்டது அறியப்பட்டது. அதில் ஒரு சுறா, 13 அடி நீளத்தில் இருந்தது.

திருமண மோதிரத்தால் அடையாளம்

திருமண மோதிரத்தால் அடையாளம்

அங்கிருந்த 13 அடி நீள டைகர் சுறாவின் வயிற்றில் ரிச்சர்ட்டின் முழங்கை உள்ளிட்ட சில பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவரது விரலில் போட்டிருந்த அவர்களது திருமண மோதிரத்தின் உதவியுடன் அவரது மனைவி அவரது இறப்பை உறுதி செய்துள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவு

டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவு

மனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடலின் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

English summary
Man eaten by sharks identified by his remains with the help of wedding ring
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X