அழகுக்கு பின்னால் இருக்கும் ஆபத்து.. அரோரா அதிசயமல்ல! சூரிய புயல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
லண்டன்: கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பூமியின் பல இடங்களில் அரோராக்கள் தென்பட்டன. சூரிய புயல் காரணமாகதான் இந்த அரோராக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இனி வரும் நாட்களில் தீவிரமான சூரிய புயல்கள் பூமியை தாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பூமியில் மிகவும் அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. இதில் அனைவராலும் கவனம் பெற்ற ஒன்றுதான் அரோராக்கள். பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் காந்தப்புலங்கள் பலவீனமாக இருக்கும். இந்த இடங்களில் சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக பூமியை தாக்கும். அப்போது வானில் தோன்றும் அற்புதம்தான் அரோரா.

அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் துருவங்களில் இது தெரியும். அதேபோல, துருவ பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகளிலும் இதனை பார்க்க முடியும். ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக வழக்கத்திற்கு மாறாக மெக்சிகோ, தெற்கு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்கா வரை இந்த அரோராக்கள் தென்பட்டன. மக்கள் இதனை கண்டு ஆச்சரியப்பட்டாலும், இது குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அதாவது, சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் செல்போன் தொடங்கி, டிவி, கம்ப்யூட்டர், செயற்கை கோள்கள் வரை எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக பேரழிவு ஏற்படும். இப்படியான காந்த புயல்கள்தான் அரோராவையும் ஏற்படுத்துகிறது.
சாதாரண நாட்களில் வட துருவங்களில் தெரியும் அரோராக்களால் பெரிய பிரச்னை கிடையாது. ஆனால், இப்போது தெரிந்திருக்கும் அரோராக்கள் மேற்குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்துவதற்கான தொடக்கம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து விளக்கியுள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் குவென்டின் வெர்ஸ்பியர்ன் கூறுகையில், "இந்த அழகுக்கு பின்னால் ஆபத்து இருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது செயற்கைக்கோள்கள் தொடங்கி, விண்வெளியில் உள்ள நமது வீரர்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாலோவீன் புயல்கள் ஏற்பட்டன. அதன் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல் இதுதான். இதனால் ஸ்வீடனில் மிகப்பெரிய அளவில் மின்சாதனங்கள் சேதங்களை எதிர்கொண்டன. அதேபோல, தென்னாப்பிரிக்காவிலும் மின் கட்டமைப்பின் மீது இது சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் ஆட்டோ பைலட் டிராக்டர்கள் பண்ணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சூரிய மின் காந்த புயல் காரணமாக, டிராக்டரின் ஜிபிஎஸ் செயலிழந்துள்ளது.
இவை அனைத்திற்கும் சூரிய காந்த புயல்கள்தான் காரணம். சூரியனில் பூமியை விட 17 மடங்கு பெரிய சூரிய புள்ளி கிளஸ்டர் உருவாகியுள்ளது. அதிலிருந்து வரும் கதிர்வீச்சுதான் இந்த ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் முடியவில்லை. இது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எங்களிடம் உதாரணம் இருக்கிறது.
கடந்த 1859ம் ஆண்டு இதே போன்ற சூரிய புயல் ஒன்று கடுமையாக பூமியை தாக்கியது. அப்போது இந்த அளவுக்கு நம்மிடம் மின்சாதனங்கள் இல்லை. தந்தி சேவையை மட்டுமே நாம் வைத்திருந்தாம். ஆனால் இந்த புயல் சமயத்தில் தந்திகள் தானாக வேலை செய்தன. ஒரு கட்டத்தில் முற்றிலும் பழுதாகி போயின. இப்போது தோன்றியுள்ள அரோராக்கள், இனி வரும் நாட்களில் தீவிரமான சூரிய புயல் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications