லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யோகா ஆசிரியருக்கே பொறுமையில்லை.. கொடூர கொலை.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் தன்னுடன் வசித்த வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 'யோகா' ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தன்னுடன் வசித்து வந்தவர் தன்னை தாக்க முயன்றதாகவும் எனவே தற்காத்துக்கொள்ளத்தான் அவரை திருப்பி தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர் கூறியுள்ளார்.

ஆனால் நீதிமன்றம் இந்த வாதத்தை மறுத்துள்ளது. இதனையடுத்து யோகா ஆசிரியர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டன்.. இத்தாலி.. துபாய்.. எல்லாமே அரசு முறை பயணம்! ஃபாரின் டூரில் கலக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!லண்டன்.. இத்தாலி.. துபாய்.. எல்லாமே அரசு முறை பயணம்! ஃபாரின் டூரில் கலக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

சண்டை

சண்டை

இங்கிலாந்தின் கிளாஸ்டன்பரியில் 54 வயதான டான் லூயிஸ் வசித்து வந்திருக்கிறார். இவர் 'யோகா' ஆசிரியராவார். இவருடன் 61 வயதான க்ளென் ரிச்சர்ட்ஸ் வசித்து வந்திருக்கிறார். தொடக்கத்தில் இருவரும் ஒன்றாகதான் வசித்து வந்திருக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்திருக்கிறது. இதனால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. எனவே இதிலிருந்து பிரிந்து சென்றுவிட வேண்டும் என்று யோகா ஆசிரியரான டான் லூயிஸ் யோசித்திருக்கிறார். இதனை க்ளென் ரிச்சர்ட்ஸிடம் சொல்லும்போதெல்லாம் பிரச்னை பெரியதாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சண்டை தீவிரமடைந்துள்ளது.

கொலை

கொலை

இதற்கு அடுத்த நாள் அவர்களது குடியிருப்பிலிருந்து க்ளென் ரிச்சர்ட்ஸின் உடலை பிணமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து இவரை கொலை செய்ததாக யோகா ஆசிரியரான டான் லூயிஸ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "சம்பவம் நடந்த அடுத்த நாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது க்ளென் ரிச்சர்ட்ஸ் சடலமாக கிடந்திருந்தார். அதேபோல டான் லூயிஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நாங்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றினோம்.

விசாரணை

விசாரணை

பின்னர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, க்ளென் ரிச்சர்ட்ஸ் உடன் தனக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் தன்னை தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும் எனவே அதிலிருந்து தப்பிக்க திருப்பி அவரை தாக்கும் போது அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் டான் லூயிஸ் கூறினார். எங்களால் இதனை நம்ப முடியவில்லை. வாக்குவாதம் குறித்து நாங்கள் ஒவ்வொரு முறையும் விசாரிக்கும்போதும் டான் லூயில் மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. சம்பவம் நடந்த இடத்தையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் சோதனை செய்து பார்த்ததில் லூயிஸ் சொல்வது உண்மை போல தோன்றியது.

ப்ளான்

ப்ளான்

ஆனால் நாங்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. லூயிஸின் நண்பர்களிடம் விசாரிக்க தொடங்கினோம். அப்போதுதான் சில உண்மைகள் எங்களுக்கு தெரிய வந்தது. அதாவது, லூயிஸ் இந்த கொலை நடப்பதற்கு முன்னர் தனது நண்பர்களிடம் சில ஆலோசனைகளை பெற்றிருக்கிறார். கொலையை எவ்வாறு மறைப்பது என்பதுதான் அந்த ஆலோசனை. கொலை செய்த கத்தியால் தன்னை குத்திக்கொண்டால் இது கொலை வழக்காக கருதப்படாது என்றும், தற்காப்புக்காக நடந்த விபத்து என வழக்கை மாற்றிவிடலாம் எனவும் நண்பர்கள் சிலர் ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆலோசனையை கேட்டுதான் யோகா ஆசிரியர் கொலையை செய்திருக்கிறார்" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

English summary
A 'yoga' teacher has been sentenced to life imprisonment for stabbing to death his roommate in England. In this matter, the accused said that the person who was living with him tried to attack him and therefore he attacked him back to defend himself. But the court rejected this argument. After this, the court has ruled that the yoga teacher is guilty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X