ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழப்பது உறுதி.. எம்பி சீட் கூட கிடைக்காதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் இப்போது ரிஷி சுனக் மீது மக்கள் அளவுகடந்த கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர் பிரதமர் பதவியை இழப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
பிரிட்டன் இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்த போது அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார். அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

ரிஷி சுனக்: ஆனால் ரிஷி சுனக் மீதான பிரிட்டன் மக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பிரதமராக அவர் பதவியேற்ற போது அவர் தந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் அவர் மீது கடுங்கோபத்தில் இருக்கும் நிலையில், தேர்தலில் அவர் படுதோல்வி அடைவார் என்றே அங்கிருந்து வரும் சர்வேக்கள் கூறுகின்றன.
அவர் பிரதமராக வந்த பிறகு என்ன தான் இரண்டு முறை வரி குறைக்கப்பட்டு, பொருளாதாரம் சற்று மேம்பட்டு இருந்தாலும் அது பிரிட்டன் மக்கலுக்கு போதுமானதாக இல்லை. இந்த நேரத்தில் உட்கட்சியிலும் ரிஷி சுனக்கிற்கு எதிராகப் பலரும் திரும்பி உள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட ரிஷி சுனக்கை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். இவை எல்லாம் சேர்ந்து ரிஷி சுனக் நிலைமை மிக மோசமான இடத்திற்குத் தள்ளி உள்ளது.
முடிவுக்கு வரும் ஆட்சி: 43 வயதான ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். பிரிட்டன் நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் ஆட்சியே நடந்து வருகிறது. ஆனால், இந்தத் தேர்தலுடன் அது முடிவுக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகிறது. அங்கு இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை அவருக்கு கால அவகாசம் இருந்தாலும் கூட அவர் இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் பிரிட்டனில் நடந்து வரும் 14 ஆண்டுக்கால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புகள் அதிகம். கடந்த 18 மாதங்களாகப் பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதே பிரிட்டன் மக்களின் கருத்தாக இருக்கிறது. இதுவரை வெளியாகும் அனைத்து சர்வே முடிவுகளும் ரிஷி சுனக்கிற்கு எதிராகவே இருக்கிறது.
எத்தனை இடங்கள்: கடந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் 365 இடங்களைப் பெற்று இருந்த நிலையில், இந்த முறை அவர்களால் வெறும் 155 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று யூகோவ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் 154 இடங்களில் மட்டுமே வென்ற எதிர்க்கட்சியான லேபர் கட்சி 403 இடங்களை வெல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் என அடுத்தடுத்து இரண்டு பேர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இருவருமே சர்ச்சைக்கு நடுவே தான் விலகினார்கள். அதிலும் குறிப்பாக டிஸ் டிரஸ் தாக்கல் செய்த மினி பட்ஜெட் பிரிட்டன் பொருளாதாரத்தைப் பாதாளத்தில் தள்ளியது. இதன் காரணமாகவே அவர் 49 நாட்களில் பதவி விலகினார். இதுவும் கூட கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைகிறது.
கடும் அதிருப்தி: மேலும், அப்போது பிரதமராக வந்த ரிஷி சுனக் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தார். ஆனால், அதில் பெரும்பாலான விஷங்களை அவர் நிறைவேற்றவில்லை. குறிப்பாக அகதிகள் விவகாரம். அகதிகள் பிரிட்டனுக்கு வருவதை முழுமையாகத் தடுப்பேன் என்று ரிஷி சுனக் வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும் அகதிகள் வருவது நிற்கவில்லை. விலைவாசி உயர்வு 50% குறைந்து இருந்தாலும் கூட பொருளாதார வளர்ச்சி பெரியளவில் இல்லை.
மேலும், அங்கு அரசு வழங்கும் இலவச மருத்து சேவைகளுக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. இவை எல்லாம் சேர்ந்து தான் ரிஷி சுனக்கின் படுதோல்விக்குக் காரணமாக இருக்கப் போகிறது. மற்றொரு சர்வேயில் 58% மக்கள் கன்சவேடிவ் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரிஷி சுனக்கிற்கான ரேட்டிங் நெகடிவில் சென்றுவிட்டது. அது -38ஆக இருக்கிறதாம்.
எம்பி பதவி: இப்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால் ரிஷி சுனக் கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை. எந்தளவுக்கு அது மோசமான தோல்வியாக இருக்கும் என்பதே விவாதமாக இருக்கிறது. குறிப்பாக உள்ள ரிஷி சுனக் போட்டியிடும் ரிச்மண்ட் மற்றும் நார்தல்லர்ட் தொகுதியில் களம் மிக நெருக்கமாகவே இருக்கிறது. அங்கே தொழிலாளர் கட்சி ரிஷி சுனக்கை விட வெறும் 2.4 சதவீதம் தான் பின்தங்கி இருக்கிறது. அதில் தோற்றால் சுனக் தனது எம்பி பதவியையும் இழக்க நேரிடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications