லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரேயடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை

பிரிட்டன் அமைச்சர் நாதிம் ஜஹாவியை அமைச்சரவையில் இருந்து பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளார்.

Google Oneindia Tamil News

லண்டன்: கன்சர்வேடிவ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நாதிம் ஜஹாவி என்பவர் வரி விவகாரங்களில் வெளிப்படையாக இல்லை என்ற புகார் எழுந்த நிலையில், அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக நீக்கியுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். அந்நாட்டில் பிரதமர் பதவியில் இருக்கும் முதல் இந்து, இளம் வயது பிரதமர் என்று பல சிறப்புகளை அவர் கொண்டிருக்கிறார்.

இருப்பினும், அவர் இக்கட்டான ஒரு சூழலில் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார். பிரிட்டன் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், அதை மீட்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர் மோடிதான்.. பிரிட்டன் எம்பி ஒரே போடு! வியந்த பிரிட்டன் நாடாளுமன்றம்உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர் மோடிதான்.. பிரிட்டன் எம்பி ஒரே போடு! வியந்த பிரிட்டன் நாடாளுமன்றம்

நீக்கம்

நீக்கம்

இதற்கிடையே சமீபத்தில் அவர் தனது அமைச்சரவையில் இருந்த ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்குச் சொந்த கட்சியிலேயே கலவையான ரிஆக்ஷன் கிளம்பிய நிலையில், அரசியலில் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டி இருப்பதால் எந்தவொரு கடும் நடவடிக்கையும் எடுக்கத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 பிரிட்டன் அமைச்சர்

பிரிட்டன் அமைச்சர்

கன்சர்வேடிவ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் நாதிம் ஜஹாவி.. இவர் ரிஷி சுனக் அமைச்சரவையிலும் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். வரி விவகாரம் தொடர்பாக அவர் கடுமையான விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், வரி தாக்கல் விவகாரத்தில் தான் கவனக்குறைவாக இருந்ததாகவும், வேண்டுமென்றே குறைவான வரி செலுத்தி முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் நாதிம் ஜஹாவி தெரிவித்தார். மேலும், தான் நிதி அமைப்பிற்கும் அபராதம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

விதிமீறல்

விதிமீறல்

இதையடுத்து ரிஷி சுனக்கின் ஆலோசகர் லாரி மேக்னஸ், கடந்த ஆண்டு ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்த போதும், வரி விவகாரங்கள் குறித்து ஜஹாவி முறையாக அறிவிக்கவில்லை என்றும் தற்போதைய பதவியில் நியமித்த பிறகும் உரிய விவரங்களை வெளியிடத் தவறிவிட்டார் என்றும் கூறினார். மேலும் கூறுகையில், "சுதந்திரமாக நடத்தப்பட்ட விசாரணையில், நாதிம் ஜஹாவி அமைச்சருக்கான கோட்களை மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்" என்று அறிவிக்கப்பட்டது.

 கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

ஏற்கனவே பிரிட்டன் அரசியல் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் உள்ளது. இந்தச் சூழலில் ரிஷி சுனக் அதைச் சரி செய்ய பல்வேறு முடிவுகளை எடுக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. ஜஹாவியை டிஸ்மிஸ் செய்தது சரியான முடிவு என்று தெரிவித்துள்ள கன்சர்வேடிவ் எம்பி ஒருவர், அவராகவே தானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் இது கொஞ்சமாவது குழப்பத்தைக் கட்டுப்படுத்த உதவியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சிலர் பிரதமர் நடவடிக்கைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

 நேர்மை முக்கியம்

நேர்மை முக்கியம்

நாதிம் ஜஹாவி அமைச்சரவை கோட்களை கடைப்பிடிக்கவில்லை என்பது உறுதியான நிலையில், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே ரிஷி சுனக் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்னைப் பொறுத்தவரை நேர்மை மிகவும் முக்கியமானது. அரசு ஒழுங்காக நடத்தப்பட வேண்டும். அது நேர்மையுடன் இருக்க வேண்டும். மக்களிடம் நாம் பதில் சொல்ல வேண்டும்.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இதில் எதாவது முறையாக நடக்கவில்லை ன்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது யாராக இருந்தாலும் சரி.. அரசியலில் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எப்போதும் தயாராக உள்ளேன். நான் பிரதமராக இருப்பதற்கு முன்பு நடந்த விஷயங்களில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், இப்போது நான் பிரதமராக உள்ளேன். இப்போது அனைத்து விஷயங்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
UK PM Rishi Sunak says Integrity is Important To him: UK PM Rishi Sunak sacks a minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X