லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்ரெட்டாக அகற்றப்பட்ட 350 ஆண்டு பழமையான எட்வர்ட் மகுடம்.. குழம்பிய பிரிட்டன் மக்கள்! என்ன காரணம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் புதிய மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ள நிலையில், லண்டன் டவரில் இருந்த எட்வர்ட் மகுடம் அகற்றப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் பல ஆண்டுகளாகத் தலைமை பதவியில் இருந்தவர் ராணி எலிசபெத். கடந்த 1952ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டுகள் இவர் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார்.

வயது மூப்பு காரணமாகத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டு வந்த எலிசபெத் மகாராணி கடந்த செப். மாதம் உயிரிழந்தார். ஸ்காட்லாந்து உயிரிழந்த போது எலிசபெத் ராணியின் வயது 96 ஆகும்.

ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு! ஒட்டுமொத்தமாக நிராகரித்த பிரிட்டன் மக்கள்.. முக்கிய தேர்தலில் படுதோல்விரிஷி சுனக்கிற்கு பின்னடைவு! ஒட்டுமொத்தமாக நிராகரித்த பிரிட்டன் மக்கள்.. முக்கிய தேர்தலில் படுதோல்வி

 மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ்

ராணி எலிசபெத் உயிரிழந்த உடனேயே அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். இப்போது அலுவல் ரீதியான பணிகளை சார்லஸே செய்து வருகிறார். இருப்பினும், இன்னும் சார்லஸுக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடைபெறவில்லை. பிரிட்டன் மக்கள் பெரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த முடிசூட்டு விழா அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதிலும், இப்போதே அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.

 350 ஆண்டு பழமையான எட்வர்ட் மகுடம்

350 ஆண்டு பழமையான எட்வர்ட் மகுடம்

பிரிட்டனில் கடைசியாக 1950களில் எலிசபெத் ராணியாகப் பதவியேற்றும் போது முடிசூட்டு விழா நடந்தது. இப்போது இருக்கும் பெரும்பாலான மக்கள் முடிசூட்டு விழாவை நேரில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால் இப்போது சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்த முடிசூட்டு விழாவை மக்கள் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர். இந்த முடிசூட்டு விழாவில் ஹைலைட்டாக இருப்பதே எட்வர்ட் மகுடம் தான். சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த மகுடம்தான் ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் பலரது கண்களையும் கவரும்.

அகற்றம்

அகற்றம்

புதிதாகப் பதவியேற்கும் மன்னருக்கு இந்த சிறப்புமிகு மகுடம் சூட்டப்படும். இது மகுடத்தை மன்னர் எப்போதும் அணிந்திருக்க மாட்டார். பொதுவாகவே இது லண்டன் டவரில் தான் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இதைப் பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்துச் செல்வார்கள். ஆனால், நேற்று லண்டன் டவருக்கு இதைக் காணப் பொதுமக்கள் சென்ற போது. அங்கு எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக பக்கிகாம் அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. அடுத்தாண்டு முடிசூட்டு விழா நடைபெறும் நிலையில், புதிய மன்னர் சார்லஸ் சைஸுற்கு ஏற்ப எட்வர்ட் மகுடத்தை மாற்றவே அது லண்டன் டவரில் இருந்து அகற்றப்பட்டதாக பக்கிகாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

 மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ்

1661ஆம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்கும் போது, இந்த எட்வர்ட் மகுடம் முதல்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் 300 ஆண்டுகளாக அனைத்து முடிசூட்டு விழாக்களிலும் அதே மகுடம் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது 350 ஆண்டுகளுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்கும் போதும் அதே மகுடம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 1953ஆம் ஆண்டு மறைந்த அவரது தாய் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட லண்டனில் உள்ள அதே வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், மூன்றாம் சார்லஸ் அடுத்தாண்டு மே 6 ஆம் தேதி முடிசூட்டிக் கொள்ள உள்ளார்.

 எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

கடந்த 1000 ஆண்டுகளாக முடிசூட்டு விழா எப்படி நடைபெற்றதோ, அதேபோலத் தான் அடுத்தாண்டும் சார்லஸ் முடிசூட்டிக் கொள்ள உள்ளார். இருப்பினும், அடுத்தாண்டு நடைபெறும் விழா சற்று எளிமையானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பொதுவாகப் பிரிட்டன் அரசு நிகழ்ச்சிகளில் 8000 பேர் கலந்து கொள்ளும் நிலையில், இந்த முடிசூட்டு விழாவில் 2000 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. மொத்தமே இந்த விழா ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும்.

கோரிக்கை

கோரிக்கை

பிரிட்டன் மன்னர் குடும்பம் ஆங்கிலிகன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, முடிசூட்டு விழாவும் ஆங்கிலிகன் மதச் சடங்குகளைப் பின்பற்றியே நடைபெறும். ராணி எலிசபெத் உயிரிழந்த போதும், ஆங்கிலிகன் முறைப்படி தான் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதேநேரம் இப்போது பிரிட்டனில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், ஆங்கிலிகன் மதத்தைப் பின்பற்றி மட்டுமில்லாமல், அனைத்து மதங்களையும் உள்ளடக்கி முடிசூட்டு விழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.

English summary
Tower of London no longer holds Historic St Edward's Crown: 350 year old St Edward's Crown is to be used in coronation of King Charles III.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X