மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்து கொண்ட நிலையில், இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நெட்டிசன்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே அதைத் தாண்டி திருமணத்திற்கான போட்டோஷூட் தான் பலரது கவனத்தையும் பெறுகிறது. திருமணத்திற்கு முன்பு, பிறகு, திருமணம் போது என ஒவ்வொரு டைப்பிலும் போட்டோஷூட்டை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு வினோத திருமணத்தின் ஒற்றை ஃபோட்டோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்கு மருமகளையே மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ளதே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 70 வயது முதியவர் ஒருவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண ஃபோட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அது தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு பர்ஹல்கஞ்ச் மாவட்டம் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் யாதவ் (70). இவர் தனது சொந்த மகன் திருமணம் செய்து கொண்ட மனைவி பூஜாவை (28) என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 மருமகளுடன் திருமணம்

மருமகளுடன் திருமணம்

சில நாட்களுக்கு முன்பு கைலாஷ் யாதவ் தனது மருமகள் பூஜாவுடன் அங்குள்ள கோயிலுக்கு வந்துள்ளார். தன்னை விட 42 வயது இளையவரான பூஜாவை அவர் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவிலில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த திருமணம் அங்குப் பேசுபொருளாக மாறியுள்ளது.

 மருமகள் மீது காதல்

மருமகள் மீது காதல்

சாபியா கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் யாதவ், பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கைலாஷுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருந்தனர். அதில் மூன்றாவது மகனின் மனைவி தான் பூஜா. இவரது கணவரும் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். கணவரின் மரணத்திற்குப் பிறகு பூஜா வேறொரு இடத்திற்குச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், அதற்குள் கைலாஷுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.

 புகார் இல்லை

புகார் இல்லை

கைலாஷ் தனது காதலை மருமகள் பூஜாவிடம் சொல்லவே அவரும் இதை ஏற்றுக் கொள்ள இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. வயது வித்தியாசம், சமுதாயத் தடைகளைத் தகர்த்தெறிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணம் தொடர்பாக யாரும் போலீஸ் அல்லது நிர்வாக மட்டத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

 போலீசார் விளக்கம்

போலீசார் விளக்கம்

இதனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தின் ஃபோட்டோக்கள் இப்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு, தேவையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த முதியவருக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+