இது என்ன ஏர்போர்ட் மாதிரி இருக்கே.. அப்படியே மாற்றப்பட்ட அயோத்தி ரயில் நிலையம்.. மாஸ் காட்டும் மோடி
லக்னோ: புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ஜங்சன் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இது லிஃப்ட், எஸ்கலேட்டர்கள், உணவு பிளாசாக்கள், குழந்தை பராமரிப்பு அறைகள் மற்றும் மத மற்றும் பூஜைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு சமகால வசதிகள் உடன் கட்டப்பட்டு உள்ளது.
அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைக்க உள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெட்ரோ நிலையத்தின் மாடலில் ஏர்போர்ட்டில் இருக்கும் வசதிகள் போல மிக மிக பிரம்மாண்டமாக இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

விமான நிலையம்: அப்படியே விமான நிலையத்தின் மாடலில் இது கட்டப்பட்டு உள்ளது. உள்ளே எக்சிலேட்டர்கள் தொடங்கி நவீனமான வழிகாட்டும் பலகைகள் வரை வைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ஸ்டைலில் ரயில் நிலைய வாயில்கள் கட்டப்பட்டு உள்ளன. ராமர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் மூன்று மாடி கட்டிடம் மற்றும் புதிய வசதிகள் கட்டுவதற்கு ₹241 கோடி செலவாகியுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய நிலையக் கட்டிடம் 140mx32.6m அடிச்சுவட்டைக் கொண்டுள்ளது. முன் பக்கம் மட்டும் பயணிகள் இருக்க வசதியாக 140mx12m கூடுதல் பகுதி அமைக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில்தான் அயோத்தியில் விமான நிலையம் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அயோத்தி தாம் நிலையம் இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் படி கட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அயோத்திதாம் ஜங்சன் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இது லிஃப்ட், எஸ்கலேட்டர்கள், உணவு பிளாசாக்கள், குழந்தை பராமரிப்பு அறைகள் மற்றும் மத மற்றும் பூஜைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு சமகால வசதிகள் உடன் கட்டப்பட்டு உள்ளது.
மோடி கலந்து கொள்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.












Click it and Unblock the Notifications