லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'உயர் இலக்கிய கருத்துக்கள்'.. கல்லூரி பாடத்தில் யோகி ஆதித்யநாத்& பாபா ராம்தேவ் புத்தகங்கள் சேர்ப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் இளங்கலை தத்துவம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள மாநில அரசின் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவம் பாடப்பிரிவில் ஏற்கனவே முதல்வர் யோகி ஆத்தியநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இவர்கள் இருவரின் புத்தகங்கள் சேர்க்க புதிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ராம்தேவ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?..நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிப்புராம்தேவ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?..நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு

Array

Array

மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் பரிந்துரையின் அடிப்படை. பாடத்திட்டத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. இளங்கலை தத்துவம் படிக்கும் மாணவர்களின் இரண்டாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா மற்றும் பாபா ராம்தேவின் யோக் சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா ஆகிய புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உயர் இலக்கிய கருத்துக்கள்

உயர் இலக்கிய கருத்துக்கள்

இந்த இரண்டு புத்தகங்களையும் மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் தத்துவ பாடத்திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு புத்தகங்களும் உயர் இலக்கிய கருத்துக்களையும் கல்விக்குத் தேவையான கருத்துக்களையும் கொண்டிருப்பதால் அவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகப் பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மாநில அரசின் குழு

மாநில அரசின் குழு

தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை உருவாக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தான் தற்போது முதல்வர் யோகி ஆத்தியநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்களை இளங்கலை தத்துவம் பாடப்பிரிவில் இணைக்க பரிந்துரை அளித்துள்ளது.

யோகா பற்றி அறிய உதவும்

யோகா பற்றி அறிய உதவும்

இது குறித்து சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டி.என். சிங் கூறுகையில், "குழுவால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் கல்விக்கான உயர்ந்த கருத்துகளைக் கொண்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புத்தம் யோகா பற்றி விளக்குகிறது. நமது பண்டைய அறிவியலான யோகாவைப் பற்றி அறிய இது போன்ற புத்தகங்கள் நமக்குத் தேவை. அதேபோல், ராம்தேவின் புத்தகமும் தத்துவ மாணவர்களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும். ஏனெனில் அவரே ஒரு யோகா குரு. அவர் யோகாவை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.

English summary
CM Yogi, Baba Ramdev Books included for Philosophy studies in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X