திருப்பம்.. 7 இடங்களில் போட்டியில்லை.. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதிக்காக விட்டுக்கொடுத்த காங்கிரஸ்!
உத்தர பிரதேசத்தில் தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் 78 இடங்களில் மொத்தம் 7 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பமாக தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் 78 இடங்களில் மொத்தம் 7 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில், 75 இடங்களில் மொத்தம் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட இருக்கிறது. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

எதனால்
மொத்தம் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி மொத்தம் 78 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதியில் தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடவில்லை. மரியாதை நிமித்தமாக அந்த இடங்களை பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி தவிர்த்துள்ளது.

7 தொகுதிகள்
இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடும் இடங்களில் மொத்தம் 7 இடங்களில் போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடாத இரண்டு தொகுதிகளுக்கு கைமாறாக 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

என்ன இடங்கள்
மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் போட்டியிடும் மைன்புரி தொகுதி, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னாஜ் தொகுதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்திரி போட்டியிடும் தொகுதிகள், மாயாவதி போட்டியிடும் ராஜ் பாப்பார் தொகுதி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கூறியுள்ளது.

நெருக்கம் ஏற்பட்டுள்ளது
இது தற்போது பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க கூட வாய்ப்பு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications